எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நலவாழ்வு சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பெருமிதம்

சென்னை, ஆக.16 தமிழக மூதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மருத்துவ குழுமம் இணைந்து  நலவாழ்வு சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டம் இதய துடிப்பு மாறுபாடுகள் எனும் தலைப்பில் நேற்று (15.8.2018) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடல் அன்னை மணியம் மையார் அரங்கில் நடைபெற்றது.

வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் அறிமுகவுரை யாற்றினார்.

தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் ஆடிட்டர் இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு சொற்பொழிவுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

பேராசிரியர் மருத்துவர் எம்.எஸ்.இராமச்சந்திரன் தலைமை வகித்து உரையாற்றினார்.

சிறுநீரகவியல் மருத்துவ வல்லுநர் மருத்துவர் அ.இராஜசேகரன், தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் டாக்டர் நீதிபதி ஏ.கே.ராஜன் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனை இதயநோய் சிகிச்சை வல்லுநர் மருத்துவர் ஏ.எம்.கார்த்திகேசன் சிறப்புரை யாற்றினார். இதயம் இயங்குவது குறித்தும்,  இயற்கையில் பிறக்கும்போதே ஏற்படும் குறைபாடுகள், அவற்றை களை வதற்கான மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களிடையே இருக்க வேண்டிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர் எடுத்துக் காட்டி விளக்குவதைப்போல், பட விளக்கங்களுடன் மிக எளிமையாக அனைவரும் புரிந்துகொண்டு பயன்பெறும் வண்ணம் விவரித்தார். உரையைத் தொடர்ந்து, பார்வை யாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு சொற்பொழிவுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மருத்துவ வல்லுநர்களுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், பார்வையாளர் களாக பங்கேற்று பயனடைந்த பெருமக்களையும் பெரிதும் பாராட்டினார்.

எங்கள் இனத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு தகுதி, திறமை உண்டு என்று  பெருமைப் படும்படியாக திறமையான மருத்துவ வல்லுநராக மருத்துவர் ஏ.எம்.கார்த்திகேசன் இருக்கிறார். சிறந்த மருத்துவ மேதையை அறிமுகப்படுத்திய எம்.எஸ்.ஆர் அவர்களுக்கு நன்றி. மேலும் இதுபோன்ற மருத்துவப் பணிகள் தொடர வேண்டும்.

சிறப்பு சொற்பொழிவுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார். (சென்னை, 15.8.2018)

முன்பு அறிவியல் தனியே இருந்தது. தொழில்நுட்பம் தற்போது அறிவியலுடன் இணைந்து வளர்ச்சி பெற்றுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு நம்பிக்கை யுடன் வாழலாம்.  மருத்துவ நெருக்கடி உடலுக்கு ஏற்படும்போது மட்டும் மருத்துவர்களை அணுகாமல், வரும் முன்னர் காக்கும் வகையில், அனைத்து வயதினரும் ஆண்டுக்கு ஒருமுறை யாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

இப்போது இங்கே பேசிய மருத்துவர் ஏ.எம்.கார்த்திகேசன் நவீன அறிவியல் வளர்ச்சி குறித்து சுட்டிக்காட்டியதை 20 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவைச்சேர்ந்த மிச்சுவோ காகோ என்பவர்  இதய செயல்பாட்டைக் கண்காணிக்க சிப் ஒன்றை கழுத்தில் அணியும் டையிலோ, காலில் ஷூவுக்குள்ளேயோ வைத்து பயன்படுத்தலாம் என்று எழுதியுள்ளார்.

பெரியார் மருத்துவக் குழுமம் புற்றுநோய் ஆராய்ச்சி முகாம்களை நடத்தி, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தந்தை பெரியார்  உடற்கொடைக்கழகம் உடற் கொடையை ஊக்கப்படுத்தி வருகிறது. குருதிக்கொடை முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. குருதிக்கொடை, உடற்கொடைகளின் மூலமாக நம் கொள்கை வெற்றி பெறுகிறது. இறந்தபின்னர் எரிப்பதா, புதைப்பதா என்று மத பழக்கங்கள் மாறி உடற்கொடைகள் அளிக்கப்படுகின்றன. குருதிக்கொடை, உடல் உறுப்புகள் கொடைகளின் மூலமாக ஜாதி, மதம் என்பவை செயற்கையானவை என்பது நிரூபிக்கப்படுகிறது.  விழிப்புணர்வு இயக்கம், பிரச்சாரம் வரும் முன் காப்பதற்கு பயன்படும்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசுகை யில் குறிப்பிட்டார். கூட்ட முடிவில் மேனாள் நீதிபதி பரஞ்சோதி நன்றி  கூறினார்.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞர்கள் சு.குமாரதேவன், ஆ.வீரமர்த்தினி, எழுத்தாளர் மஞ்சைவசந்தன், சுதா அன்புராஜ், மருத்துவர் அ.சூர்யா, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், புலவர் பா.வீரமணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், தென்.மாறன், புலவர் வெற்றியழகன், சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி,  நாகவள்ளி, வி.வளர்மதி, கவுதமன், கோ.வீ. இராகவன், உடுமலை வடிவேல், கலையரசன், கலைமணி  உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழர் தலைவரிடம் நன்கொடை

திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு மேனாள் துணைவேந்தர் எஸ்.வி.சிட்டிபாபு அளித்த நன் கொடை ரூ.5ஆயிரம் தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner