எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மன்னார்குடி, ஆக.21 6.8.2018 அன்று மாலை 6 மணியளவில் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் தஞ்சை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மன்னை நகரத் தலைவர் ஆர்.எஸ். அன்பழகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பால், அணுகு முறையால் தந்தை பெரியார் கொள்கைகளின் வெற்றி, இன்றைய காலகட்டத்தில் கழகத் தோழர்களின் செயல் பாடுகள், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றிவிழா பொதுக்கூட்டத்தை மன்னார் குடியில் மிக எழுச்சியுடன் நடத் துவது பொருத்தமானது குறித்து கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையுரையாற்றினார்.

தொடர்ந்து தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் கவுதமன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட் டச் செயலாளர்கள்: பெ.வீரையன், அ.அரு ணகிரி, சு.துரைராசு, நீடாமங்கலம் வட்ட ப.க. தலைவர் சிவஞானம், நீடா மங்கலம் ஒன்றியத் தலைவர் கணேசன், நீடாமங்கலம் நகரத் தலைவர் அமிர்தராசு, குடந்தை குருசாமி, கழக பேச்சாளர் இராம.அன்பழகன், படப்பைக்காடு ரஞ்சித், குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், மாவட்ட ப.க. தலைவர் வீரமணி, தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராஜேந்திரன், பட்டுக்கோட்டை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பரமசிவம், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், பேராவூரணி நகரத் தலைவர் குழ.அரங்கசாமி, மன்னை சித்து, நகர ப.க. மன்னை அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் கவுதமன், மாவட்ட அமைப் பாளர் வை.சிதம்பரம், மாவட்ட துணைச் செயலாளர் நீலகண்டன், பட்டுக் கோட்டை ஒன்றியத் தலைவர் வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் அரு.நல்லதம்பி, ப.க. புரவலர் ஆசிரியர் வேலு, மன்னை ஒன்றியச் செயலாளர் செல்வராசு, நகரச் செயலாளர் இராமதாஸ். உரத்தநாடு ஒன்றியத் தலைவர் இராசப்பன், பட்டுக்கோட்டை நகரத் தலை வர் சேகர், தஞ்சை நகரத் தலைவர் நரேந் திரன், செயலாளர் முருகேசன், திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், செயலாளர் ஸ்டாலின், நீடாமங்கலம் ப.க. கலைச் செல்வன், மேலவாசல் திரிசங்கு, தெற்கு நத்தம் சுப்ரமணியன், தலையாமங்கலம் துரைராசு, கருவிழிக்காடு சுப்ரமணியன், மன்னை உத்திராபதி, மதுக்கூர் பாலா, நீடாலமங்கலம் நகர செயலாளர் இராஜேந் திரன், பொன்னுச்சாமி, மன்னை சுபா சந்திரபோஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரத்தமிழன், மன்னை ஊமத் துரை, திருவாரூர் மாவட்டத் தலைவர் இரா.கோபால், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில பகுத் தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரமேஷ், மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, மண்டல செயலாளர் மு.அய்யனார், மண்ட லத் தலைவர் வெ.ஜெயராமன், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் உள்ளிட் டோர் கருத்துரையாற்றினார்கள். இறுதியாக மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: பெரியார் பெருந்தொண்டர் மதுக்கூர் கோவிந்தராசு, உரத்தநாடு ஒன்றிய துணைத் தலைவர் தலையாமங்கலம் துரைராசு அவர்களின் தாயார் குப்பம்மாள், திருவோணம் ஒன்றிய செயலாளர் இராம மூர்த்தி அவர்களின் தந்தையார் கோவிந்தசாமி ஆகி யோர்களின் மறைவிற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங் கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

2) தந்தை பெரியார் அவர்களின் இறுதி போராட்டமான ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான 48 ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்தின் காரணமாக இந்து அற நிலையத்துறையின் கீழ் இயங்கும் மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது திராவிட இயக்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி கோவில் கருவறை நுழைவு போராட்டத்தை முதன் முதலில் மன்னார்குடி ராஜ கோபாலசாமி கோவிலில் நடைபெறும் என தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழா பொதுக் கூட்டத்தை மன்னார்குடியில் (2.9.2018) மிக எழுச்சியுடன் நடத்துவது என தீர்மானிக் கப்படுகிறது. உடனடியாக சுவர் எழுத்து விளம்பரம், பிளக்ஸ் விளம்பரங்களை செய்வது எனவும், கழகத் தோழர்கள் அனை வரும் குடும்பத்துடன் பெருந்திரளாக பங் கேற்பதுடன், நிதிவசூல் உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

நன்கொடை அளித்தவர்கள்

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் & ரூ. 5,000, பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் & ரூ. 5,000, த.ம.செயலாளர் மு.அய்யனார் & ரூ. 5,000, தஞ்சை மா.து.தலைவர் முத்துராசேந்திரன் & ரூ. 3,000, நீடாமங்கலம் வட்ட ப.க. ப.சிவஞானம் & ரூ. 2,000,  மாவட்ட அமைப்பாளர் பேராவூரணி வை.சிதம்பரம் & ரூ. 2,000, மன்னை நகர தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் & ரூ.  2,000, பட்டுக்கோட்டை நகர தலைவர் வை.சேகர் & ரூ. 2,000, மன்னை ப.க. செயலர் கோவி.அழகிரி & ரூ. 2,000, பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெ.வீரைய்யன் & ரூ. 2,000, மாவட்ட துணை தலைவர் அரு.நல்லதம்பி & ரூ. 1,000, தலைமை கழக பேச்சாளர் இரா.அன்பழகன் & ரூ. 1,000,  பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி & ரூ. 1,000, குடந்தை மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ் & ரூ. 1,000, த.மா.செயலாளர் அ.அருணகிரி & ரூ. 1,000, மு.மா.இ.தலைவர் மன்னை சித்து & ரூ. 500, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல் & ரூ. 500, உரத்தநாடு ஒன்றிய தலைவர் ம.ராஜப்பா & ரூ. 500, பெருக வாழ்ந்தான் இளைஞரணி எம்.பி. குமார் & ரூ. 500

மொத்தம் & ரூ.37,000

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner