எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஆக. 21 மதுரை பெத்தானியாபுரத்தில் மானமிகு சுயமரியாதைக்காரர் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

16.8.2018 அன்று இரவு 7 மணியளவில் மதுரை பெத்தானியாபுரத்தில் மானமிகு சுயமரியாதைக்காரர், முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினை வேந்தல் கூட்டம் பகுதி அமைப்பாளர் பாண்டி தலை மையில் நடைபெற்றது.

தென்மாவட்ட பிரச்சார குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, அமைப்புச் செயலாளர் செல்வம், மண் டலத் தலைவர் மா.பவுன்ராசா, செயலாளர் முருகேசன், மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை செயபால் சண்முகம், திராவிட இயக்க தமிழர் பேரவை ஜெயம் பெருமாள், சிவா, மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மதிமுக மஹபுகான், மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் உரைக்குப் பின்பு நினைவேந்தல் உரையை கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் ஆற்றினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் செயல் படுத்தப்பட்ட திட்டங்கள், பத்திரிகையாளர், தமிழ் மொழிப் பற்று, திரைத்துறை மற்றும் பன்முகம் கொண்ட தலைவர் கலைஞர் என்று மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

பகுதி திமுக நாகஜோதி சிவா, ராதாகிருஷ்ணன், முத்தையா, தமிழரசன், நாகராஜ், ஆசைதம்பி, இன்ப ராஜ், கண்ணன், கழக வழக்குரைஞர்கள் சித்தார்த்தன், கணேசன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் த.ம.எரிமலை, இளைஞரணி திருமங்கலம் முத்து கருப்பன், உசிலம்பட்டி பெரியசாமி, கூடல்நகர் ராசேந்திரன், ரோ.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் மணிராஜ், பகுதிச் செயலாளர்கள் ஆட்டோ செல்வம், சுரேஷ், இராஜேந்திரன், வேல்துரை, ராக்கு தங்கம், பாக்கியம், இராதா, பொ.பவுன்ராஜ், ஆரப் பாளையம் நாகராசு, பி.அமர்நாத் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பா.காசி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner