எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.22 அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை முதல் கட்ட வெற்றி யைக் கொண்டாடும் வகையிலும், அதில் அடுத்த கட்ட நிலை என்ன? என்பது குறித்தும் சிறப்புக்கூட்டம் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (21.8.2018) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

கழகத்துணைத் தலைவர் வரவேற்பு

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை குறித்து 1937ஆம் ஆண்டில் குடிஅரசில் தந்தை பெரியார் எழுதினார். தந்தை பெரி யாரின் இறுதிப்போராட்டமும் அதுதான்.  முதல்வர் கலைஞர் சட்டம் கொண்டு வரு கிறேன் போராட வேண்டிய அவசியமில்லை என்றார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா வதில்  தடைஇல்லை என்று எல்லா நீதிபதி களும் கூறியுள்ளனர். நீதிபதி மகராஜன் குழு, நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. கேரளாவில் ராஜேந்திரபாபு, துரைசாமிராஜூ வழங்கிய தீர்ப்பில், “மற்ற வர்கள் சமஸ்கிருதம் படிக்க தடை இருந்ததால் அர்ச்சகர் ஆக முடியவில்லை. இப்போது அந்த தடையில்லை’’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டார்கள்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் அவராகவே சென்று வாதாடியவர் மு.பெ.சத்தியவேல்முருகனார் ஆவார்.

தந்தை பெரியார் மறைந்த நேரத்திலே அன்னை மணியம்மையார், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பிரச்சினையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அஞ்சல்  அலுவலகங்கள் முன்னாலே மறியல் போராட்டம் நடத்துவதென்று அறிவித்தார். அந்த போராட்டத்தை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்கமிட்டி மணலி கந்தசாமி இல்லத்தில் நடைபெற்றது. அந்த கமிட்டியில் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வது பொருத்த மானது என்று குறிப்பிட்டு அனைவரையும் வரவேற்று பேசினார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், தமிழர் தலைவர் ஆசிரியரோடு ஆயிரக் கணக்கானவர்கள் இணைந்திருக்கிறோம். என்றென்றும் அவரோடு இருப்போம். தந்தை பெரியாரின் மாணவராக ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டுள்ள பணி மகத்தான பணி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தை நினைவுபடுத்திய கவிஞருக்கு நன்றி. திராவிடர் கழகமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்படுவதில் ஆச்சரியமில்லை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதில் நீதிமன்றம் தடையாக இல்லை. அதுவும் ஓர் அரசுப்பணிதான். அதில் இடஒதுக்கீடு இருக்கவேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்பில் உள்ளதைப் போல், அர்ச்சகர் பணியிலும் இடஒதுக்கீடு வேண்டும்.

ஆசிரியர்அவர்கள் எப்போதோ கூறியது அல்லது எழுதியது என்நினைவில் உள்ளதைக் கூறுகிறேன். கொள்கைகளை சொல்வதுதான் கட்சி. ஆனால், கொள்கையை சொல்லாத வர்கள், ஆர்.எஸ்.எஸ். மனுதர்மக் கொள் கையை பகிரங்கமாக சொல்லாதவர்கள் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார்கள்.

தந்தை பெரியார் தொடங்கி நடத்திய போராட்டங்களில் ஒருபோதும்  நாம் தோற்றதில்லை. ஆசிரியர் அவர்கள் ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.  மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயில் நுழைவுப் போராட்டம் தந்தை பெரியார் அறிவித்த போராட்டம் இருக்கிறது.

அடுத்த நிலையை முடிவு செய்யும் பொறுப்பு, உரிமை, கடமையை ஆசிரியரிடம் விட்டுவிடுகிறோம். பொருத்தமானவர் ஆசிரி யர்தான். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோளோடு தோள் கொடுத்து நிற்கும்.

தந்தை பெரியார் வாழ்நாள்முழுவதும் போராடி வெற்றி பெற்றவர். விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது-. இன்னும்  அதிகமாக செயல்படவேண்டியுள்ளது என்று இரா.முத்தரசன் குறிப்பிட்டார்.

மு.பெ.சத்தியவேல்முருகனார்

மு.பெ.சத்தியவேல்முருகனார் பேசுகை யில்,  2000ஆண்டு கால சமூக நீதிக்கான போராட்டத்தில் இப்போது வெற்றி கிடைத் துள்ளது.

எனக்கு பல்கலைக்கழகங்கள் அளித்துள்ள டாக்டர் பட்டங்களை விட பெரியார் திடலில், அனைத்து ஜாதியினருக்கம் அர்ச்சகர் உரிமை வழக்கில் உச்சநிதிமன்றம் சென்று வாதாடி யவர் என்று குறிப்பிடுவதே எனக்கு பெருமை யாக உள்ளது.

274 பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. 38,635 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேரை உடனடியாக அந்த கோயில்களில் இளநிலை உதவியாளராக நியமிக்கலாம் என்று  உச்சநீதி மன்றத்தில் அர்ச்சகர் வழக்கில் நேரில் வாதாடியவரான பொறியாளர் சைவத்திரு மு.பெ.சத்தியவேல்முருகனார் உரையாற்று கையில் குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு

சிறப்பு விருந்தினர்கள் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மு.பெ.சத்திய வேல்முருகனார் ஆகியோருக்கு இயக்க வெளியீடுகளை தமிழர் தலைவர் அளித்து சிறப்பு செய்தார்.

நூல் வெளியீடு

சிறப்புக்கூட்டத்தில் அய்ந்து நூல்கள் வெளியிடப் பட்டன. அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை ஏன்? (ரூ.30), அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ஆகமங்களும் (ரூ.50), ஜாதி-தீண்டாமை ஒழிப்பு அறப்போர் ஏன்? (ரூ.5), தமிழ்நாடு இந்து சமயங்களின் வரலாறு (ரூ.20) ஆகிய நூல்கள் மொத்த நன்கொடை ரூ.120, சிறப்புத் தள்ளுபடி ரூ.20 போக ரூ.100க்கு நூல்கள் வழங்கப்பட்டன.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழர் தலைவரிடமிருந்து ஏராளமானவர்கள் உரிய தொகை கொடுத்து பெருமகிழ்வுடன் நூல்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எண்ணூர் வெ.மு. மோகன், கொடுங்கையூர் தங்க.தனலட்சுமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், கொரட்டூர் பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,  தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், பகுத்தறிவாளர் கழகம் ராஜமாணிக்கம்,  கமலக்கண்ணன், ஆறுமுக அடிகளார், அம்பத்தூர் இராமலிங்கம் உள்பட ஏராளமானவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

கலந்துகொண்டவர்கள்

காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன், இராஜமாணிக்கம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், புலவர் பா.வீரமணி, க.பார்வதி, சி.வெற்றிசெல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார் களம் இறைவி, செந்துறை இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்,  அருணாசலம், போளூர் பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.தமிழ்சாக்ரட்டிஸ், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், பெரம்பூர் கோபாலகிருஷ்ணன், சேகர்,ஊரப்பாக்கம் வேமன்னா, மா.குணசேகரன், பாஸ்கர், க.தமிழ்ச்செல்வன், திருவான்மியூர் கா.அமுதரசன் உள்பட பலரும் சிறப்புக்கூட்டத்தில் பெரிதும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

கட்சிகள் வேறுபாடின்றி, கடவுள் மறுப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையில் முதல் கட்ட வெற்றியையடுத்து, அடுத்த நிலை என்ன என்பதை அறிந்து, அதற்கு உறுதுணையாக தோள்கொடுக்கும் உணர்வுடன் பெருந்திரளானவர்கள் திரண்டிருந்தார்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள்

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களில்  சென்னை நடராஜன், கொளத்தூர் மோகன்குமார், ஆவடி கருணாமூர்த்தி, சென்னை கிருஷ்ணமூர்த்தி, சென்னை தமிழ்செல்வன் அய்ந்துபேர் சிறப்புக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில், பட்டை அடித்தவர்கள், கழுத்தில் உத்திராட்சக் கொட்டை அணிந்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்கொடை


கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் பு.ர.கஜபதி- ப.ஜயலட்சுமி இணையரின் அறுபதாண்டு பண்பான மணவாழ்வின் (24.8.2018) மகிழ்வு நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்! நன்றி!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner