எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடலூர், ஆக. 23 வடலூர் திராவிடர் கழகம் சார்பில் ஈரோட்டு குருகுல மாண வர், சுயமரியாதை சுடர் டாக்டர் கலை ஞர் அவர்களுக்கு வீரவணக்கப் பொதுக் கூட்டம் 19.8.2018 அன்று மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை எம்.ஆர்.கே. பேருந்து நிலைய திடலில் முன் னாள் மாவட்ட செயலாளர் வெ.செந் தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் இரா.குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார், மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், வடலூர் நகர தலைவர் புலவர் சு.இராவணன், வழக்குரைஞர் அணி திராவிடஅரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை கழக பேச்சாளர் இரா.பெரி யார்செல்வன் அவர்கள் கலைஞர் அவர் களின் பண்புகளையும், அவர் செய்த சாதனைகளையும் விரிவாக எடுத்து விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன், ஒன்றிய தலைவர் கோ.இந்திரசித், மண்டல மகளிர் பாசறை செயலாளர் இரமாபிரபா வடலூர் கருணாமூர்த்தி, மாவட்ட மகளி ரணி தலைவர் செ.முனியம்மாள், மாவட்ட வீரவிளையாட்டு கழக தலை வர் இரா.மாணிக்கவேல், வடலூர் திரா விட ரவி, செல் சேகர், அசோக்குமார், தீனமோகன், நூலகர் இராஜேந்திரன், வே.ஆசைமணி, பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன், வடக்குத்து நூலகர் இரா. கண்ணன், ந.கனகராசு, மருவாய் சேகர், திருநாவுக் கரசு, பாஸ்கர், நெய்வேலி பாஸ்கர், பாவேந்தர் விரும்பி, மகளிரணி பொறுப்பாளர்கள் செல்வராணி, தமிழ்மணி, திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்துரு, கவுன்சிலர், தமிழ்ச் செல்வன் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வடலூர் நகர செயலாளர் இரா.முத்தையன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner