எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செம்பியம், ஆக. 26- தந்தை பெரியாரின் உற்ற தோழரும், தனது எழுத்தாலும், பேச்சாலும் தமிழ்ப் பண்பாடு காத்த பெருந் தகையாளரும், தொழிலாளர் தலைவர் திரு.வி.க. அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (26.8.2018) பெரம்பூர் & செம்பியம் திரு.வி.க.நகரில் உள்ள திரு.வி.க.சிலைக்கு வட சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலையணிவிக் கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு குழுமிய கழகத் தோழர்கள் வாழ்த்து முழக்கமிட வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர்  சு.குமாரதேவன் திரு.வி.க.சிலைக்கு மாலைய ணிவித்தார்.

சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட துணைச் செயலாளர் கள் கி.இராமலிங்கம், சி.பாசு கர், செம்பியம் கழகத் தலைவர் பா.கோபாலகிருட்டிணன், செயலாளர் டி.ஜி.அரசு, வட சென்னை மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப் பாளர் இரா.அரங்கநாதன், கு. சவுந்தர்ராஜன், பாவேந்தர் பகுத் தறிவுப் பாசறை செயலாளர் ஓவியர் கிருபா, என்.டி.எஸ்.சீனிவாசன், கேப்டன் இரமேசு, மருத்துவக் கல்லூரி மாணவர் இர.அசோக்குமார், பெரியார் பிஞ்சுகள் ச.அன்பழகன், இர. பிரபாகரன், திரு.வி.க நகர் வீட்டு உரிமையாளர் சங்க நிர் வாகிகளான வீரராகவன், பார்த் தசாரதி மற்றும் பெருந்திரளான தோழர்களும், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண் டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner