எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஆக. 28- பெங்களூரு பெரியார் மய்யம் தலை வர் கி.வீரமணி அரங்கம், திராவிடன் அகத்தில் அண்மையில் மறைவெய்திய கலைஞரின் நினைவேந்தல் 19.8.2018 அன்று நடைபெற்றது.

கழகக்கொடியை செயற் குழு உறுப்பினர் அமுத பாண் டியன் உயர்த்தி வைத்தார். கலைஞரின் உருவப்படத்தினை வழக்குரைஞர் பிரிவு அமைப் பாளர் பெஞ்சமின் பிராங்கன் திறந்து வைத்தார். அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி காத்தனர். பின்னர் அனைவரும் வீரவணக்கம், வீர வணக்கம் எனக்கூறி படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இரங்கல் நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்று இணைப்புரைத்தார், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ நிகழ்த்தினார். கருநாடக மாநி லத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் நிகழ்வுக்குத் தலைமையேற்று உரை நிகழ்த் தினார். மாநிலத்துணைத் தலை வர் வீ.மு.வேலு, தங்கம் இரா மச்சந்திரா, பு.ர.கஜபதி, மாநில பொருளாளர் கு.செயக்கிருட் டிணன், செயற்குழு உறுப்பினர் அமுதபாண்டியன், ஈஜிபுரா தலைவர் கோ.சண்முகம், சிறீ ராம்புரம் தலைவர் எம்.ஆர்.பழனி, திருச்சி கனகராஜ், தென் மண்டலத் தலைவர் கவிஞர் வீ.இரத்தினம், தமிழர் முழக்கம் இதழ் ஆசிரியர் வேத குமார், தென் மண்டல செயலாளர் பாவலர் கி.சு.இளங்கோவன், வழக்குரைஞர் பிரிவு அமைப் பாளர் பென்ஞமின் பிராங்கி ளின், வழக்குரைஞர் பிரிவு தலைவர் சே.குணவேந்தன், கவிதை படித்து இரங்கலுரை நிகழ்த்தினர்.

பெங்களூருத் தமிழ்ச்சங்க செயலாளர் இராம சுப்பிரமணி யன், தமிழர் கூட்டமைப்புத் தலைவர் தொழில் அதிபர் ப.பக்தவச்சலம், மூத்த வழக் குரைஞர் பகுத்தறிவாளர் சிறீ தர் மூர்த்தி ஆங்கிலத்தில் இரங் கலுரை நிகழ்த்தினர்.

பெங்களூருத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் கோ.தாமோ தரம், தலைவர் தி.கோ.தாமோ தரன், பெரியார் பெருந்தொண் டர் முத்து செல்வன் இரங்க லுரை நிகழ்த்தினர்.

பின்னர் பொதுக்குழு உறுப் பினர் நீலாங்கரை ஆர்.டி. வீர பத்திரன் இரங்கல் சிறப்புரை நிகழ்த்தினார். மாநில துணைச் செயலாளர் வே.நடவரசன் நன்றி உரை நிகழ்த்தினர்.

தமிழ்ச்சங்க முன்னாள் பொருளாளர் இரா.சம்பத், பேராசிரியர் சு.கோவிந்தராசன், எலக்டிரானிக் சிட்டி தலைவர் இராசா, மதியழகன் மற்று இல்லத்தினர்களும் கழகத் தோழர்களும், செயற்குழு உறுப் பினர் தங்கவயல் கிருபாநிதி, பு.ஜெயலட்சுமி, கஜபதி, பிர பாவதி, பிரேம்குமார், புவனை பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை பொதுச்குழு உறுப்பினர் இரா.இராசாராம், புவனை பாபு இருவரும் கடைசி வரை இருந்து ஒழுங்குபடுத்தி சிறப்பித்தனர்.

சிறீராம்புரம் பகுதி தலை வர் எம்.ஆர்.பழனி மதிய உணவு வழங்கி சிறப்பு செய்தார்.

இறுதியாக அண்டை மாநி லமான கேரளாவின் வெள்ள துயர் துடைப்பு பணிக்கு தங் கம் ராமச்சந்திரா அம்மையாரின் முயற்சியால் ரூ. 3900, கழகத் தோழர்களிடம் வசூலித்து பெங் களூருத் தமிழ்சங்கத் துணைத் தலைவர் கோ.தாமோதரனிடம் செயலாளர் இரா.முல்லைக்கோ வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner