எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக. 28- தலைவர் தந்தை பெரியார் காலந்தொட்டு ஆசிரியர் தமிழர் தலைவரின் அன்பிற்கு பாத்திரமான மிக தீவிர பெரியார் பெருந்தொண்டர், திராவி டர் கழக மேனாள் தலைவர் சுயமரியாதை சுடரொளி காரை சி.மு.சிவம் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் காரை சி.மு. சிவம் அவர்களின் புதல்வர், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி அவர்களின் 67ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் 21.8.2018 அன்று புதுச் சேரி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

முன்னதாக 67ஆவது பிறந்த நாள் காணும் சிவ.வீரமணி அவர்கள் புதுச்சேரி ரோட்டரி கிளப் ஆப் காஸ்மாஸ் சங்க தலை வர், பொறுப்பாளர்கள், கழக பொறுப்பா ளர்கள், அனைத்து கட்சி மற்றும் பெரி யாரிய இயக்க பொறுப்பாளர்கள், சிவ.வீர மணி அவர்கள் மகன் சிவ.அன்பரசன், மருமகள் காயத்திரி அன்பசரன் மற்றும் பேரன்கள் முன்னிலையில் கேக் வெட்டி னார். அனைவரும் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

பிறகு புதுச்சேரி விடுதலை வாசகர் வட் டத் தலைவர் இரா.சடகோபன் வரவேற் புரையாற்றினார். ப.க.செயலாளர் கைலாச நெ.நடராசன் ஒருங்கிணைப்பு உரையாற் றினார். கருத்தரங்கம் "பார்ப்பனீய நடுவன் அரசும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர் தலும்" என்ற தலைப்பில் நடைபெற்றது. புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந. நடராசன், புதுச்சேரி மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன், புதுச்சேரி பகுத் தறிவாளர்கழக தலைவர் ஆடிட்டர் கு. இரஞ்சித்குமார், உழவர்கரை நகராட்சி கழகத் தலைவர் சு.துளசிராமன், புதுச்சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், புதுச் சேரி கழக இளைஞரணி தலைவர் திராவிட இராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்ற கழக தெற்கு பகுதி அமைப் பாளர் சட்டமன்ற உறுப்பினர் இரா.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில மேனாள் செயலாளரும், மேனாள் அமைச்சருமான தோழர் இரா.விசுவநாதன், புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா ஜாங்கம், மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்க அமைப்பாளர், தலைவர் தோழர் இரா.மங்கையர்செல்வம், புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தோழர் தேவ.பொழிலன், பொதுச் செயலாளர் தோழர் சு.பாவாணன், புதுச்சேரி மாநில மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் பஷீர்அகமது, புதுச்சேரி நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் தோழர் பிரகாஸ், புதுச்சேரி தன்னுரிமை இயக்க தலைவர் தூ.சடகோபன், புதுச்சேரி பெரி யார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் தோழர் தீனா, பழங்குடியி னர் கூட்டமைப்பு தலைவர் பெருமாள், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் தோழர் சாமி நாதன், புதுச்சேரி தமிழர் களம் அமைப்பின் தலைவர் தோழர் அழகர், புதுச்சேரி சமூக நீதி பேரவை தலைவர் தோழர் நவீன் தன ராமன், புதுச்சேரி கிராம பஞ்சாயத்து அமைப் பின் தலைவர் தோழர் ஜெகன்நாதன், புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் தோழர் பாவாடைராயன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற் றினார். முடிவில் ஆ.சிவராசன் நன்றி கூறினார். பிறந்த நாள் காணும் சிவ.வீர மணி அவர்களுக்கு திராவிடர் கழக தலை மைக்கழகம் சார்பில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துகளை தெரிவித்தார். பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும், ரோட்டரி சங்க உறுப்பினர்களும் சால்வை மற்றும் பழங்கள் தந்து பிறந்த நாள் வாழ்த் துகளை தெரிவித்தனர்.

நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட் சியின் மாநில செயலாளர் தோழர் அமுத வன், ப.க.அமைப்பாளர் கோ.கிருட்டிண ராஜ், திமுக பொறுப்பாளர் பெல்லாரி கிருஷ்ணமூர்த்தி, பெரியார் பெருந்தொண் டர் அ.வீரசேகர் பெரியார் பெருந்தொண்டர் காரை பெரியார் முரசு, வாணரப்பேட்டை பெ.ஆதிநாராயன், கலைவாணர் நகர் களஞ்சியம் வெங்கடேசன், ஓய்வு பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் தேசிங்கு, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல்வன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் இரா.தாமோதரன், வில்லியனூர் கொம்யூன் கழக தலைவர் கரு. சி.திராவிடச்செல்வன், அரியாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா.ஆதிநாராயணன், பெரியார் பெருந் தொண்டர் இருசாம்பாளையம் செ.இளங் கோவன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் வீர.இளங்கோவன், புதுச்சேரி தனி தமிழ் இயக்க தலைவர் கலைமாமணி முனைவர் க.தமிழமல்லன், கலைமாமணி வி.பி.மாணிக்கம், புதுச்சேரி நகராட்சி கழக செயலாளர் த.கண்ணன், புதுவை சிவம் இலக்கிய பேரவை தலை வர் சிவ.இளங்கோ, சிவ. இள.கோவளன், செம்படுகை நன்னீரகம் தலைவர் தோழர் தாமரைக்கோ, மகளிரணி தேவகி பழனி, யேசுராஜா, முன்னாள் புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர் பூ.மூர்த்தி, நியுபிலால் முகமது நிஜாம், பூ.ஆ.இளையரசன், தே. வா.அறிவுமணி, உலுவையாறு நா.அப் பங்காளி, அப்சல் பாஷா, ஜி.இராஜா, பி.சதீஷ், நெல்லித்தோப்பு திமுக தொகுதி செயலர் செ.நடராசன், க.அசோக்ராஜ், க.வைத்தியநாதன், சங்கதமிழன் மனோஜ்குமார், இராம்குமார், சிவக்குமார், வழக் குரைஞர் தோழர் சங்கரன், பெரியார் பிஞ்சு தி.இரா.பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner