எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புவனகிரி, ஆக. 29 மாவட்ட திராவிடர் கழகம், புவனகிரி கிளை சார்பில் நான் ஒரு மானமிகு சுயமரியாதைக் காரன் என்ற டாக்டர் கலை ஞர் அவர்களுக்கு வீரவணக் கப் பொதுக்கூட்டம், மாவட்ட தலைவர் பேரா சிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் 20.8.2018 அன்று மாலை 6 மணிக்கு புவனகிரி பாலம் அருகில் நடைபெற்றது.

திமுக ஒன்றிய செய லாளர் டாக்டர் எம்.மனோ கரன், புவனகிரி திமுக நகர செயலாளர் த.கந்தன் ஆகி யோர் முன்னிலை ஏற்றனர்.

நிகழ்ச்சியில் மணி ராஜன், ஓய்வு பெற்ற தலை மையாசிரியர் நெடுமாறன், பெரியார் படிப்பக துணைத் தலைவர் ஆறு.கலைச்செல் வன், மண்டல மாணவர் கழக செயலாளர் ச.வீரமணி, மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஜி.எஸ்.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன், தொகுதி செய லாளர் சுதாகர், கீரப்பாளை யம் ஒன்றிய திமுக செய லாளர் பி.சபாநாயகம் ஆகி யோர் உரையாற்றிய பின் திராவிடர் தலைமைக் கழகப் பேச்சாளர் யாழ்.திலீபன் சிறப்புரையாற்றி னார். பின்னர் அவருக்கு புவனகிரி சட்டமன்ற உறுப் பினர் துரை. கி.சரவணன் அவர்கள் சால்வை அணி வித்து சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சியில், பெரியார் பெருந்தொண்டர்கள் புவன கிரி ஆசிர்வாதம், பெரு மாத்தூர் பழனியாண்டி, கழகத் தோழர் மழவை. ஆறுமுகம், நகர திமுக துணைச் செயலர் சண்முகம், மதிமுக எம்.அருணாசலம், விடுதலை சிறுத்தைகள் வே.செல்வகுமார், அழகா னந்தம், மதிமுக சுந்தர் ஆகியோர் கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner