எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.30 சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (29.8.2018) திராவிடர் கழகம் சார்பில் கூட்டப்பட்ட 69 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து அனைத்துக்கட்சிக் கூட் டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திரு மாவளவன் அவர்களுக்கு திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு தெரிவித் தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீனாட்சிபுரம் ஜாதிக் கலவரம், மதமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட் டம் பெற்றதற்காக தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

வகுப்புவாத கலவரங்களை விதைத்து வரும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் ஜாதி, மத வெறிகொண்டு கலவரங் களை விதைத்து வருகின்றன. இராமாயண சீதை, சேக்கிழார் பெரிய புராணம்குறித்த ஆய்வு களை நடத்தும் நேரத்தில், மீனாட்சிபுரம் ஜாதிக்கலவரம், மதமாற்றங்கள்குறித்து எழுச் சித்தமிழர் தொல்.திருமாவள வன் ஆய்வு செய்துள்ளார் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பெரியார் திடலில் பனைவிதை நடுவிழா

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு லட் சம் பனை மரங்கள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை அறிந்த தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, பெரியார் திடலிலும் பனை விதைகளை நடலாம் என்று கூறினார்.

அதனையடுத்து, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தமிழர் தலைவர் ஆசிரியர் இருவரும் இணைந்து இரு பனை மர விதைகளை பெரி யார் நினைவிட வளாகப்பகுதி யில் நட்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கழக அமைப் புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப் பாளர்கள் உடனிருந்தார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner