எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஆக. 30 15.7.2018 அன்று பெங்களூரு பெரியார் மய்யத்தில் கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழாவும் பொதுக்குழு உறுப்பினர் இராசாராம் சாவித்திரி இணை யரின் அய்ம்பது ஆண்டு நிறைவு இணை யேற்பு நாள் விழாவும் மாநிலத் தலைவர் மு. சானகிராமன் தலைமையில் நடைபெற் றது.    மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ வரவேற்புரையாற்றினார். ஒயிட் ஃபீல்டு தலைவர் கிருபாநிதி கழகக் கொடியை ஏற்றி னார். கவிஞர் இரத்தினம் பெரியார் உருவப் படத்தை திறந்து வைத்தார். தங்கம் இராமச் சந்திரா காமராசர் படத்தைத் திறந்து வைத்தார். பெரியார் பெருந்தொண்டர் முத்துசெல்வன், கல்வி வளர்ச்சிக்காக காமராஜர்  ஆற்றிய பணிகள் பற்றியும் அவர் காலத்தில் கட்டப் பட்ட  அணைகள், தொழிற்சாலைகள் பற்றி யும் சிறப்புரையாற்றினார்.  பெங்களூர் தமிழ்ச் சங்க தலைவர் தி.கோ.தாமோதரன், துணைச் செயலாளர்  அமுதபாண்டியன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்  இராசாராம், சாவித்திரி இணையருக்கு சிறப்பு செய்து வாழ்த்துரை வழங்கினர்.

வி.மு.வேலு, ஈஜிபுரா சண்முகம், ஆனந் தன், எலக்ட்ரானிக் சிட்டி  ஒளிவண்ணன், மலர் முருகேச பாண்டியன், பு.ர.கஜ பதி, முத்துமணி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினார்கள்.   மகளிர் அணி சார்பில் தங்கம், செயலட்சுமி, சத்தியவாணிமுத்து, பிரபாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.     விழாவில் செல்வமணி, சங்கர், சிவா, அருண் குமார், ரோசன், அனுசுயா, அனிதா, செய வர்சினி, தமிழ்ச்செல்வி, அறிவுச் செல்வி, மருத்துவர் மீனாட்சி சுந்தரம், சம்பத் குமார், இரவிச்சந்திரன், பவன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டார்கள்.    பொதுக்குழு உறுப்பினர் இராசாராமின் மகன் இராதா கிருட்டினன், மருமகள் கதிர்ச்செல்வி ஏற்புரை வழங்கினார்கள். பொதுக்குழு உறுப்பினர் இராசாராம் நன்றி கூறினார். இராசாராம் குடும்பத்தார் சார்பில் இனிப் பும் அசைவ உணவும் அளிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner