எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, ஆக. 30 மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தின் பின்புலமாக இருப்பது ஜாதிதான் என்பதை அப்படிப்பட்டமாக விமர் சிக்கும் ஆவணப்படமான கக்கூஸ், ஆவடி உண்மை வாசகர் வட்டத்தில் திரையிடப்பட்டது. ஆவடி பெரியார் மாளிகையில் மாதந்தோறும் நடைபெறும் உண்மை வாசகர் வட்டம் ஆகஸ்டில் 19-.08.2018, ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு திரையிடலாக நடத்தப்பட்டது. முற்போக்கு சிந்தனையுள்ள திவ்யபாரதி என்ற தோழர் இயக்கி மத்திய, மாநில அரசுகளை காட்டமாக விமரிசித்துள்ள கக்கூஸ் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் உண்மை வாசகர் வட்டத்தின் தலைவர் க.வனிதா தலைமையேற்க, செயலாளர் இ.தமிழ் மணி அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். பொருளாளர் சோபன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜாதியை ஒழிக்கச் சொல்லும் ஆவணப்படம்!

கடுமையான போராடங்களுக்குப் பின்னும் மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் அவலத்திற்கு எதிராக சட்டமியற்றிய பின்னும், அந்த அவலங்கள் தொடர்வதையும், இதற்கு ஜாதி ஒரு முக்கிய காரணமாகத் திகழுவதையும், இதை ஒழிக்க சட்டமியற்றியதோடு அரசாங் கங்கள் அதை செயல்படுத்துவதில் அக்கரையே காட்டவில்லை என்பதையும், ஸ்வட்ச் பாரத் திட்டத்தில் ஏராளமான மக்களின் வரிப்பணம் வீணாக இருப்பதையும், வெற்று விளம்பரத்திற்கு மட்டுமே அது செலவழிக்கப்படுவதாகவும், மலம் அள்ளுவதற்கு இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்டபின்னும் இந்த அவலம் தொடர்வதையும் ஏராளமான தரவுகளோடு முகத்தில் அறை வதைப்போல படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இதன் இயக்குநர் திவ்யபாரதி. இதனால் சம் பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் என் னென்ன தீண்டாமைக் கேடுகள், தொற்று நோய்கள், விஷவாயுவால் தாக்கப்பட்டு ஏற் படும் மரணங்கள், அதற்கும் சட்டப்படி நிவாரணம் கிடைப்பதில் உள்ள சகலவிதமான அரசியல் நடப்புகளையும் தோலுரித்து தொங்க விட்டிருக்கிறார்.   மகளிர் பெரும்பாலும் காட்சி களின் அவலத்தால் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதும், கண்ணீர் சிந்துவதுமாக இருந்தனர். சிலர் இந்த அவலத்தின் தாக்கத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் அரங் கத்தைவிட்டே வெளியேறிவிட்டனர். இத்திரையிடலை பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை யின் சார்பில் பெரியார் வலைக்காட்சித் தோழர் கள் உடுமலை வடிவேல், அருள், சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மலம் அள்ளுவதற்கு எதிராகத் தீர்மானம்!

கக்கூஸ் ஆவணப்படம் ஏற்படுத்திய தாக் கத்தால், உண்மை வாசகர் வட்டத்தின் சார்பில், மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தைப் போக்கவும், அந்தப்பணியைச் செய்பவர்களுக்கு உரிய மாற்றுப்பணி வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறாம் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக  உண்மை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் சி.ஜெயந்தி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். திரையிடல் முடிந்ததும் இதுகுறித்த ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. எப்படியாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்றும், தங்களால் ஆன மட்டும் இந்த அவ லத்திற்கு எதிராக முற்போக்கு அமைப்புகளோடு சேர்ந்து தாங்களும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற அனைவரும் கருத்துத் தெரிவித்தனர்.

கலந்து கொண்டவர்கள்!

நிகழ்ச்சியில் ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென்னரசு, செயலாளர் சிவக்குமார், துணைச் செயலாளர் இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணி அமைப் பாளர் கலைமணி, ஜெயந்தி, வஜ்ரவேல், ராதிகா, சோபன்பாபு, பகுத்தறிவு பாசறை கொரட்டூர் கோபால், கொரட்டூர் பன்னீர் செல்வம்,  தமிழ்ச்செல்வி, கோபாலகிருஷ்ணன், அருள்தாஸ் (எ) இரணியன், ப.க. மாவட்டத் தலைவர் ராமதுரை, கனிமொழி கலையரசன், பாக்யா கலைமணி, பூவை வெங்கடேசன், சரவணன், தேன்மொழி, மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், மாணவர் கழக தோழர்கள் வ.ம. வேலவன், காரல் மார்க்ஸ், பெரியார் பிஞ்சுகள் சமத்துவமணி, தென்றல், சித்தார்த்தன், எழில் நிலவன் மற்றும் உண்மை வாசகர் வட்டத்திற்கு புதிதாக பொதுமக்கள் சிலரும், அம்பத்தூர் காவல் துறையைச் சேர்ந்த தோழர்களும் வந்தி ருந்து கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner