எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறந்தாங்கி, ஆக.30 அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 25.8.2018 அன்று காலை 10 மணியளவில் மண்டலத் தலைவர் அலுவலகம் ஆலங் குடியில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தலைமையில் நடந்தது. மண்டல தலைவர் பெ.இராவணன், மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்ட செயலாளர் இளங்கோ, தலைமை கழக பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன், பகுத் தறிவாளர் கழகம் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 1: சுயமரியாதைக்காரர் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் களின் மறைவிற்கு அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 2: 20.8.2018 அன்று சென்னை யில் நடைபெற்ற கழக தலைமைச் செயற் குழு கூட்டத்தின் முடிவுகளை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப் படுகிறது.

தீர்மானம் 3: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை அறந்தாங்கி கழக மாவட்டம் முழுவதும் மிக எழுச்சியோடு கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: இன உரிமை மீட்பு ஏடான விடுதலை ஏட்டிற்கு அறந்தாங்கி கழக மாவட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக 100 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங் குவது என முடிவு செய்யப்பட்டது.

வருகை தந்தவர்கள்

அறந்தை மாவட்ட இளைஞரணி செய லாளர் இரா.யோகராஜ், மாவட்ட இளை ஞரணித் தலைவர் ப.மகாராசா, கறம்பக்குடி மாவட்ட துணைத் தலைவர் க.முத்து, லெ.ராஜ்குமார், ஆ.ராமையன், வி.தங்க வேலு, பெரியார் பிஞ்சு யோ.செந்தாமரை செல்வி, பெரியார் பிஞ்சு யோ.யோக செந் தமிழ், அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் குழ.சந்திரகுமார் ஆகியோர் வந்து சிறப் பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner