எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரம்பலூர், ஆக. 31 பெரம்பலூர் மாவட்டம், விடுதலை வாசகர் வட்டம் 13ஆவது நிகழ்ச்சி 25.8.2018 அன்று மாலை 5.30 மணிக்கு டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் கூடியது. திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித் தார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செய லாளர் பெ.நடராஜன் அனைவரையும் வர வேற்றார். டாக்டர் கலைஞரின் படத்தை திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் திறந்து வைத்து கலைஞரின் சமூக மற்றும் அரசியல் சாதனைகளை கூறி னார்.

சிறப்பு சொற்பொழிவாளர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியதேவன் சுயமரியாதைக் காரர் கலைஞரின் சரித்திர சாதனைகள் என்ற தலைப்பில் கலைஞரின் சரித்திர சாதனைகள் என்ற தலைப்பில் கலைஞரின் இளமைப் பருவம், போராட்ட குணம், இசை பயிற்சியில் மனித நேயத்துடன் நடத்தப்படாமையால் பயிற்சியை இடையில் நிறுத்திக் கொண்டது. காதல் படிக்கட்டு, நச்சுக்கோப்பை போன்ற கதைகள், சுயமரியாதை திருமணம், விதவை திருமணம், 49% வரை இடஒதுக்கீடு, சமத்துவபுரம், சூத்திரர் அரசு, ராஜராஜசோழன் சிலை, பெரியாருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தல், பெண்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, சமச்சீர் கல்வி திட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மதிய உணவில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை, அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலை கழகம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், பேருந்துகள் அரசுடமை ஆக்கி தனித்துறை உருவாக்கப்பட்டது. போன்ற பல சமூக மற்றும் அரசியல் புரட் சியை எடுத்து கூறினார்.

கூட்டத்தில் விடுதலை வாசகர்கள் இரா.கிருஷ்ணசாமி, கு.வரதராசன், தேனரசன், பி.தங்கவேலு, ஜி.கே.மூர்த்தி, தங்க.இராச மாணிக்கம், சி.இராசு, மு.கந்தசாமி, செ.தமிழரசன், நா.அரங்கசாமி, எஸ்.பழனிமுத்து, ஜெ.அமுல்ராஜ், து.சுந்தரராஜூ, க.ஜெயக் கொடி, சா.காப்பியன், ந.கருணாகரன், க.ஜெய சீலன், ஆ.கார்த்திகேயன், சுபாஷ்வளவன், சித்தார்த்தன், கு.சுமதி, சூரியகலா, ஆ.துரை சாமி, வழக்குரைஞர் இரா.ஸ்டாலின், பேராசி ரியர் தங்கப்பிரகாசம், நகரத் தலைவர் ந.ஆறு முகம், டாக்டர் குணகோமதி, நகரச் செயலாளர் வெ.சித்தார்த்தன், நகர அமைப்பாளர் அ.ஆதிசிவம், ந.சிவப்பிரகாசம், மாவட்ட அமைப்பாளர் பெ.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக ஆதிசிவம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner