எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரம், செப். 1 சென்னை தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் தாம்பரம் சண்முகம் சாலை பாரதி திடலில் மானமிகு சுயமரியாதைக்காரர் முத் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் 27.08.2018அன்று மாலை 6மணியளவில மிக சிறப்பாக நடந்தேறியது.

கூட்டத்திற்கு தலைமைக் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன், திராவிட மாணவர் கழக மாநில  செயலாளர் பிரின்சு என் னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில கூட்டு செயலாளர். செ.மெ.மதிவதினி மற்றும் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரையாற்றினர். இரா.பெரியார் செல்வன் அவர்கள் உரையாற்ற தொடங்கும்போது மழை பொழிய ஆரம்பித்தது பெரியார் செல் வன் அவர்கள் கொட்டும் மழையில் பேசத்தொடங்கி மழையிலேயே முடித்தார்கள்.

மக்கள் கரவொலி செய்து மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் 10மணி வரை இருந்து கூட்ட முடிவில் கலைந்து சென்றனர்.

உரையாற்றிய கழக சொற்பொழிவா ளர்கள் கலைஞர் அவர்களின் தொடக்க காலம். இறுதி காலம் வரை திராவிட தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள், சாதனைகளை வகைப்படுத்தி பட் டியலிட்டு ஆற்றிய சொற்பொழிவு மிக சிறப்பு என்று மக்கள் மகிழ்வுடன் கழக சொற்பொழிவாளர்களுக்கு நன்றி தெரிவித்து கை கொடுத்து பாராட்டி மகிழ்ந்தனர்.

கூட்டத்தில் கழக தோழர்கள். மாநில அமைப்பு செயலாளர் வி.பன் னீர்செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், பொதுக் குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், மாநில இளைஞரணி துணை செய லாளர் பொழிசை.கண்ணன், விடு தலை நகர் செயராமன், செந்துறை இராசேந்திரன், திராவிட தொழிலாளர் கழகம் மா.இராசு, பகுத்தறிவாளர் கழக சண்முகசுந்தரம், இளைஞரணி விஜயகுமார், சட்டநாதன், விஜய் ஆனந்த், சீ.இலட்சுமிபதி, மா.குண சேகரன், பாஸ்கரன், சங்கரலிங்கம், மணிமாறன், ரூபன் தேவராஜ், மோ.பிரபாகரன், பரசுராமன், மஞ்சுநாதன், ஊரப்பாக்கம் பொய்யாமொழி, சீனு வாசன், பெரியார் செல்வன், பீர்க் கங்கரணை மனோகரன், சிறீதர், கு. சோமசுந்தரம், இராமாபுரம் ஜெனார்த் தனம், மறைமலைநகர் துரை.முத்து, கருணாநிதி, கூடுவாஞ்சேரி நடிகர் இரவி, குப்புசாமி, செய்யார் முத்து, நங்கைநல்லூர் மோகன், தமிழினியன், சண்.சரவணன், பம்மல்.கோபி, செஞ்சி ந.கதிரவன், பண்பாளன், வடசென்னை இளைஞரணி செய லாளர் சோ.சுரேஷ், சட்டக்கல்லூரி மாணவர் பிரவீன்குமார், பூவை சீர்த்தி, மாணவர் கழகம் பூவை இன நலம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்துல்காதர், கதிரவன், குன்றத் தூர் தர்மராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வன் மற்றும் தி.மு.கழகத்தினர் நடுவீரப்பட்டு நாகராஜ்.(தி.மு.கழக பொறுப்பாளர்) இராதாகிருட்டினன்(தி.மு.கழக நடுவீரப்பட்டு ஊராட்சி பொருளாளர்) முனுசாமி(தி.மு.கழக எருமையூர் ஊராட்சி செயலாளர்)  தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலைஞர் நினைவேந்தல் கூட்டம் வெகு சிறப் பாக நடந்தேறியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner