எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவரங்கம், செப். 3 26.8.2018 அன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் மய்யத்தில் திருவரங்கம் விடுதலை வாசகர வட்டம் 46-ஆவது மாதாந்திர கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக் டர் கலைஞருக்கு நினைவேந்தல் வீர வணக்கம் கூட்டத்தில் தலைவர் மு. மீனாட்சி சுந்தரம் (தலைவர் வி.வா.வ) அறிமுகவுரையாற்றினார்,  ச. ஹரிஹரன் நினைவு உரையாற்றினார்.

வீரவணக்கம் தீர்மானம்

தீர்மானம் 1: தன்னுடைய 14 வயதில் பொதுவாழ்வில் அடியெ டுத்து வைத்த கலைஞர் அவர்கள் தன்னுடைய அரசியல் பணியால் சமூகப்பணியால் இலக்கியப் பணியால் கலைப்பணியால் கழகப் பணியால் தமிழ்ப்பணியால் அரசு நிர்வாகப்பணியால் தமிழ்நாட்டுக்கே ஒளி தந்தார். இந்த திராவிடச் சூரியனால் நாட்டில் ஒளி பெற்றோர் ஏராளம் ஏராளம். திராவிட இயக் கத்தின் சிப்பாயாக, பெரியாரின் சீட னாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக, திமுகவின் தொண்டனாக தொடங்கிய அவர் வாழ்க்கை அவ ருடைய அளப்பரிய பணியால் அவரை கட்சியின் 50 ஆண்டுகள் தலைவராக உயர்த்தியது.

அய்ம்பது ஆண்டுகள் தொடர்ந்து திமுகவின் தலைவராக அவர் இருந் தது இதுவரை யாரும் செய்திடாத ஓர் சாதனை. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ சோதனைகள் வேதனைகள் கட்சிக்கு வந்த போதெல்லாம் அத்தனையையும் தாங்கி அனைத்தையும் எதிர்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் அசைக்க முடியாத ஒரு எஃகு கோட்டையாக வைத்திருந்தவர் கலைஞர்.

அவசர காலச் சட்டத்தை எதிர்த்து அவர் போர் முரசு கொட்டியபோது ஏகாதிபத்திய மத்திய அரசு கலங்கிப்போனது.

அளப்பரிய சாதனைபுரிந்து இறுதி மூச்சுவரை போராடிய போராளி கலைஞர் மறைவால் பெரும் துயர் தாக்குதலுக்கு ஆளாகி யுள்ள தளபதி தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை யும் ஆறுதலையும் தெரிவித்து சுய மரியாதைக்காரரின் பெரும் தொண் டுக்கு விடுதலை வாசகர் வட்டம் திருவரங்கம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மானம் 2: மேனான் பிரதமரும் கொள்கைக்கு மாறுபட்டவர்களிடத்தி லும் பண்பு மாறா அன்பும் அர வணைப்பும் கொண்டவருமான இந்தியாவின் மூத்த அரசியல்வாதி அடல்பிகாரி வாஜ்பேயி அவர்களின் மறைவிற்கு வருந்துவதும் அவர் தம் குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள் கிறது.

அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அமைதியாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. கவி ஞர்கள் பு.செல்வராசு அனைப.இராசேந்திரன் ஆகியோர் கலைஞ ரைப் பற்றி கவிதை படித்தார்கள்.

ப.ஆல்பர்ட், சா.கண்ணன், இரா.முருகன், ப.இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தா. ஜெய ராசன், இரா. பொன்னுசாமி தலைமை கழக பேச்சாளர் திமுக. வீரவணக்கம் உரையாற்றினார்கள்.

முனைவர் அதிரடி க.அன்பழகன் வீரவணக்கவுரையாற்றினார். இக்கூட்டத்தில் ப.ஆல்பர்ட், பா.லெ.மதிவாணன், பி.மலர்மன் னன், பொன்.யோகராஜ், இரா.குண சேகரன், காட்டூர் கனகராசு, ம.சங்கிலிமுத்து, அ.இராமச்சந்திரன், பிரான்சிஸ், ஆ.சேவியர், சு.இளங் கோவன், ஆ.ரூசோ, அங்கமுத்து, மா.இராமசாமி, மு.அட்டலிங்கம், வை.முத்து, சாத்தம்பாடி பிச்சுமணி, திமுகழகத்தினர் ஆ.கார்த்திகேயன், ராஜேஷ், சு.சண்முகம், ஆ.நேருஜி, மு.மாணிக்கம், சண்முகம், சு.ஜெய ராஜ், தமிழ்ஆர்வலர் க.இராசேந்திரன், மூக்குப்பிள்ளை, ஏ.கருப்பையா, செ.மணிகண்டன், குறள்மொழி ச.திருநாவுக்கரசு, மோகன்ராஜ், சு.லோகநாதன், காங்கிரசு ந.நிஜ வீரப்பா, மேலூர் நந்தகுமார் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கு பெற் றார்கள்.

இறுதியாக கலியபெருமாள் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner