எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மியான்மா, செப். 5- மியான்மா அரசின் ரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி, அந்த நாட்டைச் சேர்ந்த 2 செய்தியாளர் களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுபான்மை ரோகிங்கயா முசுலிம் இனத்தவர்களுக்கு எதிரான நடவடிக் கைகள் குறித்து செய்திகளை அளித்து வந்த அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்ப தாவது:

மியான்மாவில் ராய்ட்டர்’ செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் (32), கியா சோ ஊ (28) ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

மியான்மாவின் ரகசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு, சர்வதேச அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மியான் மாவில் சிறுபான்மை ரோகிங்கயா முசு லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடப்படுவ தைத் தடுப்பதற்காக இந்தக் கைது நட வடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அந்த இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பவுத்த மதத்தினரை பெரும்பான் மையாகக் கொண்ட மியான்மாவில், லட்சக் கணக்கான ரோகிங்கயா முசுலிம் இன மக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.

வங்க மொழி பேசி வரும் அவர்கள், ராக்கைன் மாகாணத்தில் பல தலை முறைகளாக வசித்து வந்தாலும், அவர் கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோ தமாகக் குடியேறிவர்களாகவே கருதப் பட்டு வருகின்றனர்.

கடந்த 1982-ஆம் ஆண்டு இயற்றப் பட்ட சட்டத்தின்படி, ரோகிங்கயா முசு லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட் டது.

2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில்கூட ரோகிங்கயா முசுலிம்கள் ஒட்டு மொத் தமாகப் புறக்கணிக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில், தங்களது உரிமைகளுக்காக ரோகிங்கயா முசுலிம் களில் சிலர் மியான்மா அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர்.

மொழி மற்றும் மத உணர்வு காரணமாக, ரோகிங்கயா விடுதலைப் படையினருக்கு வங்கதேசம் ஆதரவு அளித்து வருவதாக மியான்மா அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், 30-க்கும் மேற்பட்ட காவல் சாவடிகளில் ரோகிங்கயா விடு தலைப் படையினர் கடந்த ஆண்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 71 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடு படும் ரோகிங்கயா விடுதலைப் படையினருக்கு எதிராக மட்டுமே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மா ராணுவம் தெரிவித்தாலும், அது கனக் கச்சிதமான இன அழிப்பு’ நடவடிக்கை என்று அய்.நா. கண்டனம் தெரிவித்தது.

அந்த நடவடிக்கைகளில் 400 பேர் உயிரிழந்ததாக மியான்மா அரசு கூறி யது. எனினும், இதில் 730 சிறுவர்கள் உள்பட 6,700 ரோகிங்கயா இனத்தவர்கள் பலியானதாக எல்லைகள் அற்ற மருத் துவர்கள்’ அமைப்பு தெரிவித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner