எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார்சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை உறுப்பினர் கே.சி. எழிலரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 200 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தலைவர் அகிலா எழிலரசன்ஆண்டு சந்தா ரூ.1,800, மாவட்டச்செயலாளர் வி.ஜி. இளங்கோ அய்ந்து ஆண்டுசந்தா ரூ.9,000, மாவட்ட துணைச்செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோ ஆண்டுசந்தா ரூ.1,800. வழங்கி மகிழ்ந்தார்கள். அமைப்புச்செயலாளர் ஊமை.செயராமன், மாணவர்கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல கழக தலைவர் வி.சிவாஜி, மாநில ப.க .துணைத்தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட இளைஞரணி தலைவர் பழனி,  நகர இளைஞரணி தலைவர் எஸ். சுரேசுகுமார், பாலாஜி, மு.ந.அன்பழகன் விசயலெட்சுமி ஆகியோர் பங்கேற்றார்கள். தருமபுரி மண்டலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள வி.சிவாஜி அவர்களுக்கு, அறக்கட்டளை உறுப்பினர் கே.சி.எழிலரசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.