எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு வீரவணக்கம் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சியுரை

சென்னை, செப்.6 சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு வீரவணக்கம் நிகழ்வு பாலர் கல்வி நிலைய அரங்கில் 4.9.2018 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பல்துறை தமிழறிஞர்கள் பங்கேற்புடன் இனவுணர்வூட்டும் உணர்ச்சிகரமான நிகழ் வாக நடைபெற்றது.

நிகழ்ச்சி தொடக்கத்தில் மேடையில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரி யாதை செலுத்தப்பட்டது. அரங்கத்தில் இருந்த அனைவரும் உணர்ச்சிமிகுதியுடன் எழுப்பிய கலைஞருக்கு வீரவணக்கம் முழக் கம் வானைப்பிளந்தது.

திமுக மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு

தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்களுக்கு தாயகம் கவி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் ஆகியோர் நினைவுப்பரிசாக கலைஞர் எழுதிய நூல் களை அளித்து சிறப்பு செய்தார்கள். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வட சென்னை திமுக கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் அளிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. குன்றக்குடி தவத் திரு பொன்னம்பல அடிகளார், சாலமன் பாப்பையா, சுகி.சிவம், இராஜா, முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வீர வணக்க உரையாற்றினார்கள்.

தமிழர் தலைவர் உரை

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

ஈரோட்டுப்பாதையில்பயணித்த கொள்கை வீரர் கலைஞர். அவருடைய மறை வையடுத்து, தமிழகம் மட்டுமல்லாமல் உலக மாமனிதர்களும் வேதனையை  வெளிப் படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்குப் பெருமை பெற்றவர் கலைஞர்.

கலைஞரோடுநாங்களெல்லாம் கொள்கையுடன் பயணித்தவர்கள். கொள்கைப் பயணத்தில் இல்லாதவர்களும் பாராட் டுகிறார்கள் என்பதுதான் கலைஞரின் சிறப்பு. அவருக்கு உலகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு வருக்கு, கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவின் மக்களவையிலும் கலைஞருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார், அண்ணா வழியில் தொண்டறத் தைத் தொடர்ந்து செய்து வந்தவர் கலைஞர். வண்ணங்கள் பலவாக இருந்தாலும், ஒரே எண்ணத்துடன் கூடியுள்ளோம். இந்த காவி (தவத்திரு பொன்னம்பல அடிகளார்) ஆபத்தில்லாத காவி. (அனைவரும் சிரிப்பு)

கலைஞரின் ஆளுமைத்திறன், நகைச் சுவை, சமயோசிதம்குறித்து இங்கே பேசிய வர்கள் குறிப்பிட்டார்கள். சமயோசிதம் என் பது ஈரோட்டு குருகுலத்தின் முதல் அரிச் சுவ டியாகும். சட்டமன்றத்தில் கேள்வி கேட்கும் போது உடனுக்குடன் பதில் அளிப்பார்.

இதே சென்னையில் இதேபோன்று பள்ளிக் கூடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. கலைஞர் பேசி முடிக்கும்போது, அவர் ஆட்சி கலைக்கப்படுவதாக தகவல் அவருக்கு வந்தது. கூட்டத்திலேயே இதுதான் நான் முதல்வராக பேசுகின்ற கடைசிக்கூட்டம் என்றார். அதே போல் பலமுறை அவரிடமிருந்து ஆட்சி பறிக்கப்பட்டிருக்கிறது. எதிர்நீச்சல் போட்டே பழகியவர். நெருக்கடி நிலையின்போது சிறைக்கு வருகிறார். ரத்த உறவுகள் மட்டுமே சந்திக்க அனுமதியுண்டு. தளபதி ஸ்டாலினை பார்க்க வருகிறார். சிறைக்கு வெளியே கலைஞரும், தயாளு அம்மாளும் தனியாக நிற்க வைக்கப் பட்டனர். சிறையில் ஸ்டாலினை சந்திக்க வந்த நேரத்தில், அதிகாரிகள் அங்கே இருந்த நாற்காலியைக்கூட எடுத்துவிட்டு, ஒரு ஸ்டூலை மட்டுமே போட்டார்கள். நெருக்கடி காலத்தில் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அவரிடம் நடந்துகொண்ட விதம் அவரை எதிர்ப்பவர்களையும்கூட கொதிப் படையச் செய்தது. கலைஞரிடம் அடிக்கடி உதவி கேட்டு சென்றவர்தான் அந்த நீதிபதி. கலைஞரை நீதிமன்றத்தில் மூன்று முறை கருணாநிதி என்று அழைக்கச் செய்து வேடிக்கை பார்த்தார். இப்படியெல்லாம் அவமானங்களை, எதிர்ப்புகளை சந்தித்தவர் கலைஞர்.

இரவில் எங்களிடம் பேசிக் கொண்டிருப் பார், அதன்பின்னரும் சட்டமன்றம் செல் வார்,  அதிகாலையில் கோப்புகளை சரி பார்த்து, மறுநாள் பட்ஜெட் உரை இருக் கும். குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்பதற் கேற்ப கலைஞர் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தவர்.

பொதுவாழ்வில் இருக்கும்போது கேள்வி வரும் அதை எதிர்கொள்ள வேண்டும்.

திராவிட இயக்கத்தில் பேசும்போதும், பேசிய பின்னரும் கேள்விகள் வரும். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வோம். தந்தை பெரியாரிடம் அதேபோன்று கேள்வி வரும். அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வார். தந்தை பெரியாரிடம் திராவிட நாடு கோரிக்கையால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன லாபம் என்று கேட்டார்கள். அப்போது தந்தை பெரியார்    நட்டம்தான் என்றார். ஆதி திராவிடர்  மீதி  திராவிடர் என்றெல்லாம் இல்லாமல், எல்லாரும் திராவிடர்களாக இருப்பார்கள் என்றார். காரைக்குடியில் அண்ணாவிடமும்  கேள்வி கேட்டார்கள். ஜின்னா திராவிடரா? என்று. சிறீமான் ஜின்னா ஆரியர்,  திருவாளர் ஜின்னா திராவிடர், ஜனாப் ஜின்னா இசுலாமியர் என்றார்.

கலைஞரிடம் தேசிய நீரோட்டத்தில் எப்போது  சேர்வீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். தேசிய நீரோட்டமில்லை, ஈரோடுதான் என்றார். 1971ஆம் ஆண்டில் தேர்தலில் ராமனைக் காட்டி திமுகவை ஒழிக்க நினைத்தார்கள். அப்போது குன்றக்குடி அடிகளார் எது வேண்டும்? என்று கேட்டு விடுதலையில் 18.2.1971இல் வெளியிடப்பட்டது. நாத்திகம் என்பது இங்கு பெரும்பான்மையின மக் களுக்கான நன்னெறி. ஆத்திகம் என்பது சிறுபான்மை, உயர்ஜாதி மக்களின் நலத் திற்கானது என்றார்

அத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் 184 தொகுதிகளை வெற்றியாகக் கொடுத்தார்கள். கலைஞருக்கு தந்தை பெரியார் தந்தி கொடுத்தார். எனக்கு பழி நீங்கியது.  உலகப் புகழ் பெற்று விட்டீர்கள் என்று பாராட்டினார்.                   திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. ஆல மர விழுதுகள், ஸ்டாலின் போன்ற பழுதற்ற விழுதுகள் இருக்கிறார்கள். கலைஞருக்கு செலுத்தவேண்டிய நன்றி எனும்போது, நாம் அனைவரும் பங்காளிகளாக ஒன்றுபட்டு வெற்றி வீரர்களாக, பாதை மாறாத இலட்சியத்தை வென்றெடுப்போம்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கலந்துகொண்டவர்கள்

திமுக மகளிரணி மாநிலங்களவைக்குழுத் தலைவர்  கவிஞர் கனிமொழி, திமுக வழக்கறி ஞரணி, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி, திமுக வழக்கறிஞரணி, மகளிரணி பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் கு.செல்வம், திராவிடர் கழக தலைமைசெயற்குழு உறுப் பினர் இன்பக்கனி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன்,  கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தன லட்சுமி, பெரம்பூர் கோபாலகிருஷ்ணன், செம்பியம் கி.இராமலிங்கம், கு.தென்னவன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் சுரேஷ், விமல்ராஜ், அம்பேத்கர், அசோக், மகேஷ், ரங்கநாதன், ந.கதிரவன், சுரேஷ், வேலவன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner