எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா

சென்னை, செ.8 சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சிறப்புக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் அழகப்பா சாலையில் சிறீராஜ் மகாலில் நேற்று (7.9.2018) மாலை 6 மணியளவில் நடை பெற்றது.

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழகத் தலைவர் இளம்பரிதி தலைமையில் சிறப்புக் கூட்டம் எழுச்சியுடன் தொடங்கியது. திருப்போரூர் சிறீ சத்யசாய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர் இள.சூர்யகலா வரவேற்று பேசினார்.

மாநில மாணவர் கழக துணை செயலாளர் நா.பார்த் திபன், சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் வ.கலைச்செல்வன், செயலாளர் வ.வேலவன், அமைப்பாளர் த.பர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரையாற்றினார். ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழகத் தலைவர் இளம்பரிதி தலைமையேற்று உரையாற் றுகையில், புதிதாக பங்கேற்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்பற்றிய சிறப்பு குறிப்புகளை எடுத்துக்காட்டியதுடன் வரலாற்றை அறிவோம், வரலாறு படைப்போம் என்றார். மருத்துவ மாணவி மங்கையர்க்கரசி பேசுகையில் நீட்  தேர்வை ஒழிப்புக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மட்டுமே முடியும் என்றும், அவர் ஆணைக்கு காத்திருப் பதாகவும் குறிப்பிட்டார்.

‘நம் உயிரோடு-ஈரோடு’ தமிழர் தலைவர் சிறப்புரை

நம் உயிரோடு & ஈரோடு தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் மாணவர்களிடையே உரையாற்றினார்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு நம் உயிரோடு & ஈரோடு. சுவாசிப்பது என்பது உயிரோடு இருப்பதற்கான அடையாளம். பெரியாரை வாசிப்போம், சுவாசிப்போம் என்ற கும்பகோணம் மாநாட்டின் முழக்கத்தின் சுருக்கமாக ‘நம் உயிரோடு&ஈரோடு’ என்று தலைப்பு கவிதையாக அளிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதில் மாணவச் செல்வங்கள் முந்திக் கொண்டுள்ளீர்கள் பெரியாரைப்பார்ப்பது அவர் உருவத்தை வைத்து அல்ல. பெரியாரை சுவாசிப்பது என்பதன்மூலம்,  அவரு டைய தத்துவங்களை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக மாணவச் செல்வங்கள் உள்ளீர்கள். மாணவர்களிடையே பேசத் தொடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர்களிடையே கேள்விகளை முன்வைத்தார்.

கேள்வி பதில்

இங்கே கூடியுள்ளவர்களில் மாணவர்கள் மட்டும் பதில் அளிக்க வேண்டும்.

1. மருத்துவ மாணவர்கள் எத்தனை பேர்? விடையாக 52 பேர். 2. மருத்துவ மாணவர்களில் பெற்றோரை மருத்துவ ராகக் கொண்டவர்கள் எத்தனை பேர்? விடையாக 5 பேர். 3. அனைத்து மாணவர்களில் பட்டதாரி பெற்றோரைக் கொண்டுள்ளவர்கள் எத்தனை பேர்? விடையாக 25 பேர். 4. அனைத்து மாணவர்களில் கல்லூரிக்கு சென்ற தாத்தா, பாட்டிகளைக் கொண்டுள்ளவர்கள் எத்தனை பேர்? விடையாக 9 பேர். 5. கல்லூரிக்குக் கீழ் எஸ்எஸ்எல்சி வரை படித்த  பெற்றோரைக்கொண்டவர்கள் எத்தனைபேர்? விடையாக 31 பேர். 6. அறவே படிக்காத பெற்றோரைக் கொண்டவர்கள் எத்தனை பேர்? விடையாக 23 பேர். 7.படித்த அம்மாக்களைக் கொண்டவர்கள் எத்தனை பேர்? விடையாக 36பேர்.  8. படித்த அப்பாக்களைக் கொண்ட வர்கள் எத்தனை பேர்? விடையாக 37 பேர்.

மேற்கண்டுள்ள இந்த விடைகளில் தாத்தா, பாட்டி 9பேராக மட்டுமே உள்ளனர். மருத்துவ மாணவர்கள் 52 பேர் உள்ளனர். இதற்கு காரணம் இந்த இயக்கம். நீதிக் கட்சி, திராவிட இயக்கம். சூத்திரனுக்கு கல்வி கொடுக்கக் கூடாது என்று முதல் தடை மனுதர்மத்தின் பெயரால் இருந்தது. அரசர்கள் காலத்தில் மனுதர்மம்தான் ஆண்டது.

மனோன்மணியம் சுந்தரனார்

"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி?" என்றார்.

நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கத்தின் சமூகநீதி பயணம்குறித்து மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தார். சிறப்புக்கூட்டத்தில் கலந்து கொண்ட புதிய மாண வர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஆசிரியர் அவர்தம் உரையில், நீதிக்கட்சி, தந்தை பெரியார், திராவிடர் கழகம், சமூக நீதி வரலாற்று தகவல்களை பாடமாக எடுத்துக்காட்டி விளக்கமாக பேசினார்.  நீதிக்கட்சி ஆட்சியின்போது 1928 ஆம் ஆண்டுகளில் இருந்த சமூகநீயை காப்பாற்றிட களம் கண்டவர் தந்தை பெரியார். இந்திய அரசமைப்புச்சட்டத்தில்  முதல் திருத்தம் உள்பட மூன்று திருத்தங்கள் திராவிட இயக்கத்தால், சமூக நீதிக்காக ஏற்பட்டது என்பதை எடுத்துரைத்தார். குலக் கல்வியை ஒழித்தது போல் 'நீட்'தேர்வையும் ஒழிப்போம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கூறினார்.

மாணவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்களை துணைவேந்தர் குழந்தைவேல் அனுப்பிவைத்தமைக்கு சிறப்புக்கூட்டத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், சேலம், கிருஷ்ணகிரி, பர்கூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கூட்ட ஏற்பாட்டில் பங்களிப்பை வழங்கிய கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக துணை செயலாளர்கள் செந்தூர்பாண்டியன், நா.பார்த்திபன்,  மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, வடசென்னை மாணவர் கழகம் யாழ்.திலிபன், வேலவன், பிரவீன்குமார், சீர்த்தி, புரசை பகுதி அன்புச்செல்வன், பாலமுருகன் உள்ளிட்டோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார். மண்டப உரிமை யாளர் பாலாஜியை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். புரசை பகுதி சார்பில் பெரியார் பிஞ்சு அ.அறிவுமதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்தார்.

சிறப்புக்கூட்டத்தை ஒருங்கிணைத்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு ஸ்டான்லி மருத்து வக்கல்லூரி திராவிட மாணவர் கழகத் தலைவர் இளம்பரிதி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் ஆங்கில மொழியாக்க நூல் ‘லிஷீஸ்ணீதீறீமீ லிவீயீமீ’ வெளியிடப்பட்டது. பெரியார் மருத்துவரணி மாநில செயலாளர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு நூல் குறித்த அறிமுகவுரையாற்றினார். கழகப்பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து மாண வர்கள் பலரும் பெரிதும் ஆர்வத்துடன் நூலைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழகத் தலைவர் இளம்பரிதி, சென்னை இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மாணவர் எ.மங்கையர்க்கரசி, பெரம் பலூர் தனலட்சுமி மருத்துவக்கல்லூரி மாணவர் தொ.முத்துக்கிருஷ்ணன்,  செய்யாறு மருத்துவர் கா.கவுதமன் ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் க.கதிரவன், தாம்பரம் மருத்துவர் மு.கனிமொழி, சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் வீ.பாவேந்தன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சு.நாத்திகன், திருப்போரூர் சிறீ சத்யசாய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர் இள.சூர்யகலா, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் க.சவுமியன், சிறீ சத்ய சாய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரி மாணவர் இரா.வீரபாண்டியன், சென்னை சட்டக்கல்லூரி மாணவர் திராவிட மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, தங்க.தனலட்சுமி, தலைமைசெயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, வடசென்னை பகுத்தறிவாளர் கழகம் ஆ.வெங்கடேசன்,  சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாணவர் கழகம் சீர்த்தி, மோகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், செந்துறை இராசேந்திரன்,  ஊரப்பாக்கம் சீனுவாசன், பொய்யாமொழி, தமிழ்செல்வி உள்பட பலரும் நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். சிறப்புக்கூட்ட முடிவில் தூத்துக் குடி க.கதிரவன் நன்றி கூறினார்.

நீட் தேர்வால் உயிரிழந்தோருக்கு மரியாதை

மாணவி அரியலூர் அனிதா, பெருவளூர் பிரதிபா,   திருச்சி சுபசிறீ, ஏஞ்சலின் சுருதி மற்றும் உயிரிழந்த பெற் றோர் உள்ளிட்ட ‘நீட்’ தேர்வால் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தும்வண்ணம் அனைவரும் எழுந்து நின்று சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.

கலந்துகொண்டவர்கள்

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், தலைமைசெயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, அமைப்புச்செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் விஜி இளங்கோ, திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி செயலாளர் ம. கவிதா, மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், வெண்ணிலா இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் எண்ணூர் மோகன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி.செங்குட்டுவன், அரும்பாக்கம் சா.தாமோதரன்,  அனகை ஆறுமுகம், உடுமலை வடிவேல், கோ.தங்கமணி, மா.ராசு, பெரம்பூர் கோபலகிருஷ்ணன், தாம்பரம் விஜய்ஆனந்த், மோகன்ராஜ், சோமசுந்தரம், வடசென்னை இளைஞரணி செயலாளர் சுரேஷ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.