எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக்.11 திராவிடர் கழகத்தின் பெரியார் மெடிக்கல் மிஷன், பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் ‘வயிறும் & வாழ்வும் & குடற்புண் சிகிச்சைகள்’ என்ற தலைப்பில் நலவாழ்வு சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (10.10.2018) மாலை நடைபெற்றது.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று பேசுகையில், சிறப்புப்பேச்சாளர் மருத் துவர் சு.நரேந்திரன் மருத்துவத்துறையில் செய்த சாதனைகள்,  அவர் மத்திய அரசு, மாநிலஅரசு உள் ளிட்ட பல்வேறு வகைகளில் அவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள் உள்ளிட்ட அவருடைய சிறப்புகளை எடுத்துரைத்தார்.

மருத்துவர் எம்.எஸ்.இராமச்சந்திரன் தலைமையேற்று மருத்துவ விழிப்புணர்வின் அவசியம் குறித்த தகவல்களுடன் உரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி யின்  சிறப்பு நிலை பேராசிரியர், இரைப்பை, குடல் உள் நோக்கி அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கலைமாமணி மருத்துவர் சு.நரேந்திரன் அவர்கள். திருச்சி, சென்னை, மணிலா வானொலிகளில் மருத்துவ ஆய்வுக்கருத்துகளை வெளியிட்டவர். மருத்துவக் கட்டுரைகள் மற்றும் மருத்துவ நூல்கள் எழுதியுள்ளவருமாகிய மருத்துவர் சு.நரேந்திரன் ‘வயிறும் & வாழ்வும் & குடற்புண் சிகிச்சைகள்’  தலைப்பில் நல வாழ்வு சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டுரையாற்றினார்.

பெரியார் நூலக வாசகர் வட்ட புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மருத்துவர் நரேந்திரன் அவர் களைப் பாராட்டி பயனாடை அணிவித்து இயக்க வெளியீடு களை வழங்கி சிறப்பு செய்தார். மருத்துவர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்களுக்கு இயக்க வெளியீடுகளை வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.

‘வயிறும் - வாழ்வும் - குடற்புண் சிகிச்சைகள்’

‘வயிறும் & வாழ்வும் & குடற்புண் சிகிச்சைகள்’  எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய மருத்துவர் சு.நரேந்திரன் அனைவரும் பயன்பெறும் வகையில் மிக எளிமையான நடையில் மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சிகள், மருந்துகள், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை படக்காட்சி விளக்கங்களுடன் விரிவாக எடுத்துரைத்தார். பார்வையாளர் களின் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்தார்.

கூட்ட முடிவில் வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.

வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், தஞ்சை மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், தஞ்சை மண்டல செயலாளர் மு.அய்யனார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஒரு லட்சம் நன்கொடை

அன்னை மணியம்மையார் அறக்கட்டளை மூல நிதிக்கு 100 குடும்பத்தினர் இணைந்து ஒரு கோடியாக அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, ஒரு லட்சம் ரூபாய் நன் கொடையை தஞ்சை பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் குடும்பத்தின் சார்பில் அளித்து தொடங்கி வைத்தார். தஞ்சை மண்டல செயலாளர் மு.அய்யனார் குடும்பத்தின் சார்பில் ஒரு லட்சத்துக்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்தார். இதுவரை 30 குடும்பங்களின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெருமகிழ்வுடன் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner