எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரா.திலீபன், தஞ்சாவூர்

தஞ்சை, நவ.8 தஞ்சையில் 19.10.2018- அன்று பெசன்ட் அரங்கத்தில், பெரியாரின் புத்தகப் புரட்சி' என்ற தலைப்பில் தமிழர் தலைவர் அவர்களின் ஓர் புரட்சி கரமான சொற்பொழிவையும், புத்தகக் கடலில் நீந்தி மகிழ்ந்த தோழர்களையும் நம்மால் மறக்க இயலாது.

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் பேசுகிறார் தொடர்&-50, சிறப்புக் கூட்டத்தில் மேற்கண்ட தலைப் பில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய அற்புதமான அவ் வுரையில், தந்தை பெரியார் அவர்களின் புத்தகப் புரட்சி பற்றி பலர் அறிந்திராத பல ஆச்சரியமான வரலாற்றுச் செய்திகளை விளக்கினார்கள். மேலும் ஆசிரியர் அவர்களின் ஆராய்ச்சி உரைகளின் தொகுப் பாகிய இராமாயணம் இராமன் இராமராஜ்ஜியம்' என்ற புத்தகம் மற்றும் சீரிய கருத்துடைய இரண்டு வெவ்வேறு புத்தகங்கள் வெளியீட்டு விழா மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆண் பெண் பாலின பேதங்களையும் தாண்டி பெண் களுக்குள்ளேயே ஒரு பேதத்தை இந்த மதவெறி கும்பல் புகுத்தி, இன்றைக்கு எத்தனை ரகளை நடந்து கொண்டு இருக்கிறது பாருங்கள்.

கருப்பையை எடுத்துப் போடு

தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள், "பெண் அடிமைத்தனத்திற்கு பிள்ளைப் பேறு தானே காரணம், ஆதலால் கருப்பையை எடுத்து போடு" என்று, மேலும் "கருவாய் புற்று நோய் அதில் தானே வருகிறது, வேண் டும் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்" என்று எந்த பரிசோதனை கூடங்களைப் பற்றியும் அறியாத அவர்கள் கூறுவார்கள், சுய சிந்தனையாளர் தந்தை பெரியார்.

கர்ப்ப ஆட்சி (Birth Control) என்ற ஆங்கிலத்தில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்து தந்தை பெரியார் அவர்கள் கூறுகிறார்கள், "கர்ப்ப ஆட்சி", "பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல்", இது ஈரோட்டில் குடி அரசு பதிப்பகத் தாரால் வெளியிடப்படுகிறது. பல டாக்டர்கள், நீதிபதி கள், பெரியோர்கள், பெண்மணிகள் முதலியோர்களின் அபிப்பிராயங்களை தொகுத்தது. குடும்பக்கட்டுப்பாடு கர்ப்ப ஆட்சி என்று  1936 இலே ஆறு அணாவிற்கு வெளியிட்டார்கள்!

ஏனென்றால் "பகவான் கொடுக்கிறான் என்று சொல்லி மக்கள் தொகை பெருகுகிறது என்பதற்காக இவ்வெளியீடு" என்று பெரியார் அவர்கள் கூறுவார்.

இந்தியாவில் ஏன் ஜனத்தொகை பெருகி வருகிறது?

நான் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, யூத இன அம்மையார் ஒருவரை சந்தித்த நேரத்தில், இவர் சமூக சீர்திருத்த பெரியார் இயக்கத்தை சேர்ந்தவர் என்று என்னை அங்கே இருந்தவர்கள் அறிமுகப்படுத்த, உடன டியாக அவ்வம்மையார், "உங்கள் நாட்டில் ஜனத்தொகை ஏன் இவ்வாறு பெருகி வருகிறது, கட்டுப்படுத்த முடியாத நிலையில், பின் எவ்வாறு முன்னேற்றத்திற்கான திட்டம் வகுக்கிறீர்கள்? கட்டுப்படுத்த ஏதும் செய்யவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு, தந்தை பெரியார் அவர்களே இந்தியாவில் முதலில் குடும்பக்கட்டுப்பாட்டை எடுத்துக் கூறிய (Pioneer of Family Planning) வழிகாட்டித் தலைவர் என்று கூறி பதிலளித்தால், பின் ஏன் அது வெற்றிப் பெறவில்லை? என்று மற்றொரு கேள்வி கேட்டார் அந்த அம்மையார்.

அதற்கு காரணம் இங்குள்ள கடவுள், மதம் நம்பிக்கை தான், நாங்கள் என்னதான், பிரச்சாரம் செய்தாலும், ஏன் பதினாறு பெற்று கொண்டீர்கள் என்று நாங்கள் கேட் டால், பகவான் கொடுக்கிறான், என்கிறார்கள் என்றேன்.

பகவான் கொடுத்தால், கூடவே...

பகவான் கொடுத்தால், கூடவே பத்து பசு மாட்டை யும், இருபது ஏக்கர் பூமியையும் கொடுத்திருப்பானே, இதெல்லாம் கொடுக்காத அவன் பொறுப்பில்லாதவன் இல்லையா? என்று வேடிக்கையாகக்கூட தந்தை பெரியார் கேட்டதையும் கூறினேன் அவ்வம்மையாரிடம்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அந்தம்மையார், மிக நகைச்சுவையாக, "You see Mr.Veeramani, In  America we are also having our god, but your god is very different from our god, your god is working over time, please stop him! stop him!"  என்று இரண்டுமுறை ஆங்கிலத்தில் கூறினார்!

அதாவது "உங்கள் கடவுள், எங்கள் அமெரிக்க கட வுளைவிட வித்தியாசமானவர் போலும், ஏனென்றால் உங்கள் கடவுள் கூடுதல் நேரம் உழைத்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தயவு செய்து அவரை நிறுத் துங்கள்! அவரை நிறுத்துங்கள்!" என்று கிண்டலாகவும், நகைச்சுவையாகவும் கூறினார்.

பெண்களின் சுதந்திரத்திற்கு குடும்பக்கட்டுப்பாடுத் தேவை

பெண்களின் சுதந்திரத்திற்கு குடும்பக்கட்டுப்பாடுத் தேவை, குழந்தை பெறுவதற்கு மட்டுமே என்று பெண்கள் தங்கள் வாழ்வை, இன்பத்தை இழந்து துன்பத்தை தாங்கி வாழ்கிறார்கள். கருத்தடையிருந்தால் இத்துன்பம் இருந்திராது என்ற புரட்சிகரமான கருத்தை பேசி புத்தகமாக்குகிறார் தந்தை பெரியார்.

இனி வரும் உலகம் புத்தகம்

அதே போல் மிகச் சாதாரணமாக ஒரு திருமண விழாவில், "இனி வரும் உலகம்" எவ்வாறு இருக்கும் என்று 1938-இல் ஆயக்கவுண்டன்பாளையம் என்ற சாதாரண கிராமத்தில் பேசுகிறார், இனி வரும் காலங் களில் ஆண் பெண் சேர்க்கையில்லாமல் வெறும் பரி சோதனை குழாயிலே குழந்தை பிறக்கும் என்று, யாரும் சிந்தித்திராத வகையில் கூறுகிறார்.

அதேபோல் 1943-இல் செய்யாறு என்ற ஊரில் இன்னொரு திருமண விழாவிலே பேரறிஞர் அண்ணா அவர்களும் அக்கூட்டத்திலே இருக்கிறார், அவரே அசந்து போகும் வகையில் பேசுகிறார் பெரியார், அன் றைய உரை "இனி வரும் உலகம்" என்று சிறிய புத்தக மாக வெளியிடப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் கூறிய அனைத்தும் இன்றைய சூழலில் வந்து விட்டது, எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பே, இனி அனை வரின் கைகளிலும் உருவம் காட்டி பேசிக்கொள்வார்கள், தந்தி இல்லா தகவல் பரிமாற்ற சாதனம் வரும் என்று கூறியுள்ளார்கள். மிகப்பெரிய ஆச்சரியம், இப்பொழுது அனைவரின் கைகளிலும் இருக்கிறதல்லவா அலைப் பேசி.

அக்காலத்தில் ஆங்கிலத்தில் சர் தாமஸ் மூர் (Utopia – Sir Thomas More), எச்.ஜி.வெல்ஸ் (H.G.Wells), போன்ற அறிஞர்கள் எதிர்கால உலகம் பற்றி கட்டுரைகள், நாவல் கள் எழுதிக் கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் மிகப் பெரிய பல்கலைக்கழகத்திற்கு சென்ற வர்கள்.

ஒப்பற்ற சுய சிந்தனையாளர்

அதுவே, தந்தை பெரியார் அவர்கள் எந்த பல் கலைக்கழகத்திற்கு சென்றார்கள்? முழுக்க முழுக்க அவர் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர்! மிக அழகாகவும், ஆழமாகவும் தன் கருத்தை கூறினார்.

அமெரிக்காவே மறந்த இங்கர்சால் (Robert Green Ingersoll), பெயரை இங்கே நீங்கள் தமிழக தெருக்களில் காணலாம், நம்மில் பல பேர்களுக்கு இங்கர்சால் பெயர் உண்டு, காரணம் பெரியார்.

ஆங்கிலம் தெரிந்தவர்களை தன்னுடன் அமர்த்தி, கடவுள், மதம், நாத்திகம் உள்ளிட்டவற்றை விளக்கிய இங்கர்சாலின் உரைகள் அனைத்தையும் மொழிப் பெயர்த்து குடிஅரசு' இதழில் வெளியிட்டார். மதம் என்றால் என்ன?  (What is Religion?) என்ற புத்தகம் ஆக்கியோன்  Robert G.Ingersoll, மொழிபெயர்ப்பாளர் அட்வகேட் லட்சுமிரதன் பாரதி (உயர்நீதிமன்ற வழக் குரைஞர், சோமசுந்தர பாரதியாரின் மகன்) வெளியிடு வோர் பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம், 1933!

இதுபோல் அன்றே, பெரிய ஆச்சரியமாக, தான் எழு தியது மட்டுமல்லாது, உலகில் எங்கோ இருக்கும் பகுத் தறிவாளர்கள், நாத்திக சிந்தனையாளர்களது நல்ல கருத்துகளை தேடிக் கொண்டு வந்து நம்மிடம் புத்தகங் களாகச் சேர்த்தார்கள்!

காந்தியாரையே கோபப்படுத்திய புத்தகம்

கேதரின் மேயோ (1927) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆராய்ந்து, விஷீலீமீக்ஷீ மிஸீபீவீணீ (இந்தியத் தாய்) என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்கள். காந்தி யாரையே கோபப்படுத்திய அப்புத்தகத்தில், இந்தியாவில் ஜாதி, தீண்டாமை, பெண் அடிமை, குழந்தை திருமணம் இருக்கிறது, குழந்தை விதவைகள் இருக்கிறார்கள்" என்று எடுத்து கூறி, மோசமான சமுதாயமாக இருக்கிறது இதனை மாற்ற வேண்டும் என்று எழுதி வெளியிட்டார்கள். & (மிஸ் கேதரின்மேயோ அமெரிக்க சமூக நலவாதி)

ஆகவே யார் நம் தவறைக் குறிப்பிட்டுச் சொன்னாலும், தவறு இருப்பின் திருத்திக் கொள்ள வேண்டுமல்லவா? என்று கேட்டார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் அவர்கள், அற்புதமான சிந்தனை யாளர்களை எல்லாம் தன்னிடம் ஈரோட்டில் கொண்டு சேர்த்து வைத்திருக்கிறார்கள், "கைவல்யம்" போன்று, கோவை சி.ஏ.அய்யாமுத்து அவர்களிடம், மேயோ கூற்று மெய்யா? பொய்யா? என்று எழுத சொன்னார்கள் பெரியார். (கோவை அய்யாமுத்து வைக்கம் போராட்ட காலத்தொண்டர். பழுத்த சுயமரியாதைவாதி & காங்கிரசு காரர். ஆற்றல் வாய்ந்த தமிழ் எழுத்தாளர்)

குடிஅரசு' இதழில் முன்னுரை எழுதினார்கள் தந்தை பெரியார், "சாதாரணமாக ஒரு இந்திய மனிதன் மிஸ்.மேயோ புத்தகத்தில் இந்தியர்களை பற்றிக் கூறியி ருக்கும் குறைகளை அடியோடு மறைத்தும் மறுத்தும் பேசியும், அவ்வம்மையாரை இழித்துப் பேசி வைது விட்டு, சும்மா இருப்பது என்றால், நம் நாட்டின் சமு தாயத்திற்கு செய்ய வேண்டிய கடமையை செய்தவன் ஆகிவிடுவானா, அல்லது அப்புத்தகத்தில் இருக்கும் குறைகளை இந்திய மக்களுக்கு நன்றாக விளக்கிக் காட்டி, அக்குறைகளை ஒழிக்க முற்படுபவன் தானே உண்மையானவன்" என்று.

சாக்கடை இருப்பதால் தானே பரிசோதகர் வருகிறார்?

ஒரே வரியில் காந்திக்கு பதில் கூறுகிறார் தந்தை பெரியார், "சாக்கடை பரிசோதகர்" (Drainage Inspector)  என்று அவ்வம்மையாரை குறைகூறுகிறீர்கள், ஆனால், சாக்கடை இருப்பதால் தானே பரிசோதகர் வருகிறார்? நீங்கள் சாக்கடையை மாற்றிவிட்டால், பின் ஏன் பரி சோதனை என்ற  பிரச்சினையில்லையே" என்று கேள்வி எழுப்பினார் பெரியார், அதற்கு பதிலே இல்லை.

அந்தப்புத்தகப் புரட்சியைக்கூட எவ்வாறு செய் தார்கள், கடைகளுக்கு கொடுக்கவில்லை, கமிஷன் விலையினால் புத்தக விலை ஏறிவிடுமே. ஒவ்வொரு கூட்டத்திலும் தந்தை பெரியார் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அன்னை மணியம்மையார் ஒரு சாதாரணத் தொண்டனை போல, புத்தகங்களை மூட்டையாக தூக்கி கொண்டு வந்து, எப்படி தந்தை பெரியார் காங்கிரசில் கதர் ஆடை மூட்டைகளை சுமந் தார்களோ, அதைப் போல் அச்சடித்தப் புத்தகங்களை மூட்டையாக சுமந்து கூட்டத்தின் நடுவே வருவார்கள். அய்யா அங்கே பேசிக் கொண்டு இருப்பார்கள், அம்மா இங்கே புத்தகம் விற்றுக் கொண்டிருப்பார்கள், இப்படி ஒரு தலைவரையும் தொண்டனையும், இயக்கத்தையும் உலகில் எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்.

புத்தக விற்பனை கணக்கு

அய்யா அவர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு வாகனத்தில் ஏறும் பொழுதே, அன்றைய புத்தக விற் பனை கணக்கை எடுத்து அம்மா அவர்கள் உடனடியாகக் கொடுப்பார்கள், வாகனம் நகரும் தருவாயிலும் இறுதி புத்தக விற்பனை செய்து கொண்டே. அய்யா அவர்கள் இன்று எவ்வளவு விற்பனையானது என்று தான் முதலில் கேட்பார், புதிதாக பார்ப்பவர்களுக்கு, அவர் பெரிய பணத்தாசை பிடித்தவராக தெரிவார், ஆனால் இருநூறு ரூபாய்க்கு விற்றது என்று கேள்விப் பட்டவுடன், இரண் டனா நான்கணா புத்தகங்கள் இருநூறு ரூபாய்க்கு விற்றது என்றால், எவ்வளவு பேர் வாங்கியிருப்பார்கள், எவ்வளவு பேருக்கு இந்த கருத்துப் போய் சேர்ந்திருக்கிறது. இந்த கூட்டம் எதுவரை வெற்றி கண்டிருக்கிறது என்று கைத்தட்டி மகிழ்வார்கள்!

பெரியாரின் இந்த புத்தகப் புரட்சிக்கு பின் ஒரு நாள் இன்னும் பல கருத்துகளுடன் மேலும் விரிவாக உங்களி டம் உரையாடுகிறேன், பின்னுரைக்கு இந்த கூட்டம் ஒரு முன்னுரையே அன்றி முற்று அல்ல, என்று எடுத்துச் சொல்லி இன்று 200 செட் புத்தகம் வாங்குவார்கள் என்று எதிர்ப்பாக்கபட்டு, 325 செட் வாங்குகிறார்கள் என்று சொன்னால், அய்யாவின் அளவுகோலோடு சொல்வோ மானால், இந்த கூட்டம் மிகப் பெரிய வெற்றி. ஏற்பாட் டாளர்கள், ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

வாழ்க பெரியார். வளர்க பகுத்தறிவு   என்று தமிழர் தலைவர் உரையையை நிறைவுசெய்தார்கள்.

இவ்வாறு மிகக் குறைந்த நேரத்தில் மிக நிறைந்த கருத்துகளை அள்ளிக்கொடுத்து தோழர்கள் அனைவரை யும் புத்தகக் கடலையும் தாண்டிய அறிவுக் கடலில் பிர யாணம் செய்ய வைத்தார்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

முற்றுப்புள்ளி இல்லை முன்னோட்டமே

இது முற்றுப்புள்ளி இல்லை முன்னோட்டமே என்று கூறியவுடன் அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி ஒளியை காணக்கிட்டியது. இருப்பினும் அக்குறைவான நேரத்தில் அக்காலத்தின் அறிவு வளர்ச்சி, புத்தகம் ஏன் புரட்சியானது, குடிஅரசு இதழின் வழியே தந்தை பெரியார் அவர்களின் பச்சை அட்டை புரட்சி, பல வகையான அய்யாவின் புரட்சிகரமான புத்தகங்கள், கருத்துகள் என்று பல அற்புதமான அறிவுச் சாரலில் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களை மகிழச்செய்தார்கள்.

கூட்டத்திற்கு வந்த அனைவரும் மேடையேறி புத்த கங்களை பெற்றுக் கொண்டதை எங்கும் எவரும் காணமுடியாது, நம் தோழர்களைத் தவிர.

மிகச்சிறப்பு வாய்ந்த இக்கூட்டத்தில் சிறப்புரை யாற்றிய ஆசிரியர் அவர்கள் இறுதியாக "பெரியாரின் புத்தகப் புரட்சி என்பது ஒரு நீண்டத் தலைப்பு, அந்த தலைப்பிலே உங்களை அவசர அவசரமாக ஒரு ஹெலிகாப்டரில் ஏற்றி, இதோ இது தான் தஞ்சாவூர் என்று காட்டியிருக்கிறோம், ஆனால் இறங்கி போய் பார்த்தால்தான் உண்மையான தஞ்சையை பார்க்க முடியும்" என்று கூறினார்கள். அதாவது அவசர அவசர மாக நேரத்தை மனதில் கொண்டு விளக்க வேண்டிய கருத்துக்களை மிக சுருக்கமாக, கடும் விருந்திற்கு முன் குடிக்கும் சிறிய சூப்பைப் போல இக்கூட்டம் முடிந் திருக்கிறது' என்று உவமையாக ஹெலிகாப்டரை கூறி தன் உரையை மகிழ்ச்சியாக நிறைவு செய்தார்கள்.

இராமாயணம், மகாபராதம் போன்ற புராண கதைகளை மட்டுமே தொடர் கதாகாட்சேபம் நடத்தும் இந்நாட்களில், தொடர்ந்து சற்றும் தயங்காமல் பகுத்தறிவு கருத்துகளை பெரியார் பேசுகிறார் என்று தொடர் சொற் பொழிவு நிகழ்ச்சியினை மாதாமாதம் நடத்திவரும் மாநில பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்டச் செயலாளர் ச.அழகிரி மற்றும் துணை நிற்கும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், முன்னிலை வகுத்த மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர்களின் பணி கண்டு பாராட்ட வார்த்தைகள் இல்லை நம்மிடம். அவர்களின் சிறப்பான பணி என்றும் தொடர வேண்டும்.

எனவே, இறுதியாக,

புரட்சி பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

- லெனின்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner