எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கம்மாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும், நா.பாவேந்தர் விரும்பி & விஜயலட்சுமி இணையரின் மணிவிழா நேற்று (10.1.2019) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து கூறினார். உடன்: செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்: சபா. இராசேந்திரன், சி.வெ. கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் குழந்தைவேலு, ம.தி.மு.க. மு. செந்திலதிபன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், தொ.மு.ச. ச.சுகுமார், கழகப் பொதுச் செயலாளர்கள்: முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், தஞ்சை மண்டல தலைவர் நெய்வேலி ஜெயராமன், கடலூர் மண்டல தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், நெய்வேலி ஞானசேகரன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்று, பெங்களூரில் பணியாற்றும் மாணவி தமிழ்பொன்னி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர். (நெய்வேலி)

 

பெரியார் பெருந்தொண்டர் அகமதுபாய் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மண்டல தலைவர் எஸ்.எம். ஜெகதீசன், மண்டல செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மண்டல தலைவர் நெய்வேலி ஜெயராமன்,  தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்செல்வி மற்றும் பொறுப்பாளர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளனர் (திருவாரூர் & 10.1.2019)

சுயமரியாதை சுடரொளி குடவாசல் கல்யாணி இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று அவரது இணையர் வசந்தா கல்யாணியிடம் உடல் நலம் விசாரித்தார். உடன்: குடும்பத்தினர் (குடவாசல் & 10.1.2019)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner