
பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு
திருவாரூர், ஆக. 2- அவர்களை பெரியவர்கள் என்பதைவிட, இளை ஞர்கள் என்றே சொல்லலாம்," எனத் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் தெரிவித் தார். பொதுநலத் தொண்டர் பூண்டி கே.கலைச்செல்வன் நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் ஆகியவற்றின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், பெரியார் பெருந்தொண்டர்களுக் கான பாராட்டு விழாவும், திருவாரூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட் டங்களின் விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சியும் 31.07.2012 அன்று மாலை 6 மணியளவில், திருவாரூர், கிடாரங் கொண்டான் பகுதியில், பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.மணியம் நினைவரங்கில் நிகழப் பெற்றது.

திருத்துறைப்பூண்டி சார்பில் விடுதலை சந்தா

திருவாரூர் சார்பில் விடுதலை சந்தா

நாகப்பட்டினம் சார்பில் விடுதலை சந்தா
கூட் டத்தின் தொடக்கமாக திண்டுக்கல் ஈட்டி கணேசன் வழங்கிய மந்திரமா ? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு மணிநேரம் நடைபெற்ற அந்நிகழ்ச்சி சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் உரிய தாக அமைந்தது. ஒரு ஊரில் கோயில் கட்டுவதைவிட, தேவாலயம் கட்டு வதைவிட, மசூதி கட்டுவதைவிட கழிப்பறை கட்டுவதே மேலானது என்கிற முத்தாய்ப்பு வாசகத்தோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தொடர்ந்து பெரியார் பெருந்தொண் டர் முனியாண்டி பகுத்தறிவுப் பாடல் பாடி பரவசமூட்டினார். முன்னதாக திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் படிப்பகத்தைப் பார்வையிட்டு, நூலக நோட்டில் கையொப்பமிட்டார்.
கழகக் கொடி ஏற்றப்பட்டது
பின்னர் நுழைவாயிலில் அமையப் பெற்ற கொடிக்கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து கிடாரங்கொண்டான் அண்ணா நகரில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆத்மநாதன் ஏற்பாட்டில் அமைக்கப் பெற்ற கம்பத்திலும் கொடி ஏற்றி னார். நிகழ்ச்சியில், மாநில இளைஞ ரணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தொடக்கவுரை ஆற்றினார். அவர் கூறும்போது, " தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், படிப்பகத்திற்கு யார் இலவசமாக இடம் அளிக்கிறார் களோ அவர்கள் பெயரில் அல்லது அவர்கள் விரும்புகிற பெயரில் நூலகக் கட்டடம் செயல்படும்," என்று அறிவித்தார்கள்.
பூண்டி கலைச்செல்வன் நினைவு நூலகம்

கிடாரங்கொண்டானில் பெரியார் படிப்பகம் திறப்பு
அவ்வகையில் பொதுநலத் தொண் டர் பூண்டி கே.கலைச்செல்வன் அவர்களின் பெயரில் அமையப் பெற்ற இந்நூலகத்தை, சென்ற ஆண்டு நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மாநாட் டிற்குச் செல்லும் வழியில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், நேர மின்மை காரணமாக எளிய முறையில் திறந்து வைத்தார்கள். அதனை விழா வாக நடத்த வாய்ப்பில்லாத நிலையில், இன்றைய தினம் ஓராண்டு நிறைவை யொட்டி அனைவரையும் அழைத்து இவ்விழாவை நடத்துகிறோம்", எனக் குறிப்பிட்டார்.
அதிரடி அன்பழகன்
விடுதலை சந்தித்தவையும், சாதித் தவையும் எனும் தலைப்பில் பேசிய தலைமைக் கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன், பார்ப்பனர்களிடம் இருந்து தமிழர்களைப் பாதுகாப்பதே விடுதலை நாளேட்டின் பணியாகும். பகுத்தறிவுக்கு எதிரான ஒரு கருத்து கூட இல்லாத பத்திரிகை விடுதலை.
பெரியார் தொடங்கிய பத்திரி கையில் தந்தை பெரியார் எழுதக் கூடாது என்றார்கள், ஈவெரா என்று தான் குறிப்பிட வேண்டும் என்றார்கள். எப்படி வேண்டுமானாலும் விற்பனை செய்யும் பத்திரிகை அல்ல விடுதலை. அது அதன் இலட்சியத்தை நோக்கி மட்டும்தான் செல்லும். பெரியார் பத்திரிகைகளுக்கு பெயர் வைக்கும் போதே விடுதலை, உண்மை, புரட்சி, குடியரசு, பகுத்தறிவு எனப் பெயர் வைத்தார். ஆனால் தமிழ்நாட்டில் பல பெயர்களோடு பத்திரிகைகள் வருகின் றன.
கேட்டால் தமிழர்களின் நாடித் துடிப்பு என்கிறார். ஆனால் தமிழனின் நாடியை ஒடிக்கும் வேலையை மட்டுமே அது செய்கிறது. இன்னொரு வரோ இதயத் துடிப்பு என்கிறார். அதுவோ இதயத்தையே அறுத்தெடுக் கிறது. விடுதலை ஒன்றுதான் பல்வேறு சோதனைகளைக் கடந்து தமிழர் களிடத்தில் அறிவுத் துடிப்பை உண்டாக்குகிறது. எனவே அறிஞர் அண்ணா சொன் னதைப் போல வெள்ளித் தோட்டாக் களை அள்ளி வீசுங்கள்," என அதிரடி அன்பழகன் பேசினார்.
முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன்

உடற்கொடை வழங்கிய க.முனியாண்டி, அ.உத்திராபதி ஆகியோருக்கு முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் பாராட்டு
உடல்கொடையளிப்பிற்கு பதிவு செய்து கொண்ட பெரியார் பெருந் தொண்டர்கள் க.முனியாண்டி, அ.உத் திராபதி ஆகியோரைப் பாராட்டி, முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் உரையாற்றினர். அவர்தம் உரை யில், "திமுகவுக்கு ஸ்டாலின் போல, திராவிடர் கழகத்திற்கு வீ.அன்புராஜ் செயல்படுகிறார்," என்றார். மேலும் பேசுகையில், ஆசிரியர் முனியாண்டி, உத்திராபதி போல நிறைய பகுத்த றிவுப் பணிகள் செய்தவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்கள்.
கொள்கை களை பேசும்போதைவிட, செயல் படுத்தும் போதுதான் அது சிறப்புக் குரியதாக இருக்கிறது. தனிப்பட்ட வாழ்வில் நிறைய சோதனைகள், அவமானங்கள் ஏற் பட்ட நிலையிலும் கொள்கையில் நிலையாய் நிலைத்து நின்றவர்கள். என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு ஆசிரியர் முனியாண்டி அவர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. பார்ப்பனர் களின் சூழ்ச்சியும், ஆதிக்கமும் இன்ன மும் தொடர்ந்துதான் வருகிறது. திருப்பதி கோவில் வருமானம் எவ் வளவு? எனத் தகவல் உரிமைச் சட்டத் தில் கேள்வி எழுப்பினால், இது மதம் சம்பந்தப்பட்டது, கேட்காதீர்கள் என்கிறார்கள்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நெற்றி யில் திருநீறு வைத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு அதில் நம்பிக் கைக் கூட இல்லாமல் இருக்கலாம். எனினும் பார்ப்பனீயத்தின் அழுத்தம் தாங்காமல், அதன் அடிவருடியாய் மாறிப் போகிறார்கள்," என்று குறிப்பிட்டார்.
திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்
திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலை வாணன் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் நூலகம் அமைக்கும் பணியைத் திராவிடர் கழகம் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தமிழ்நாட் டில் சிலரோ மூடுவது குறித்து யோசிக்கிறார்கள். நூல்கள்தான் ஓரினத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும். அதுதான் மனிதர்களுக்கு விழிப் புணர்வை ஊட்டும்.
தமிழ்நாட்டின் பண்டைய சிறப்புகளை நூல்களின் வாயிலாக அறிகிறபோது நமக்கு ஏற்படுகிற உத்வேகமே அலாதியானது. அந்த உத்வேகத்தைத் தமிழன் பெற்றுவிடக்கூடாது என ஆரியம் அலறுகிறது. அதனால்தான் நூலகங்களை மூடுவதற்கு வீரியம் காட்டுகிறது. சுயமரியாதைச் சட்டம் இயற்றியது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம், சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்ணுரிமையை நிலை நிறுத்தியது என எண்ணற்ற சாதனைகளை திமுக செய்திருக்கிறது. இந்த நேரத்திலே நமது இளைஞர்களுக்கு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். திருமணத்தின் போது வைக்கப்படும் விளம்பரங் களில் திரைப்பட நடிகர்களின் படங்களைப் பெரிது பெரிதாகப் போடுகிறீர்கள். ஆனால் நமக்காக உழைத்தவர் தந்தை பெரியார்.
நமக்கான திருமண உரிமையைப் பெற்றுத் தந்தவரும் அவரே. எனவே திருமணத்தில் விளம்பரம் வைப்பதாய் இருந்தால், பெரியார் படத்தைப் போடுங்கள். அதுதான் சிறப்பு என பூண்டி.கலைவாணன் பேசினார்.
வீ.அன்புராஜ்
நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், "எஸ்.எஸ். மணியம் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருவதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால் திடீரென அவர்கள் மறைவுற்றார்கள். எஸ்.எஸ்.மணி யம் அவர்கள் இல்லாமல் திருவாரூர் வரும் சூழலே சற்று சிரமமானதாக இருந்தது.
பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பொன்னாடை!
இங்கே பெரியார் பெருந்தொண்டர்கள் 65 பேருக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பட்டது. அவர்களைச் சந்திப்பதும், பெருமைப் படுத்துவதும் மகிழ்ச்சியான ஒன்று. ஏனெனில் இன்றைய சமூகம் அவர்களால் உருவாக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டர்கள் என அழைப்பதில் கூட எனக்குச் சிரமம் இருக்கிறது. ஏனெனில் இன்றும் இளைஞர்கள் போல செயல்படுகிறார்கள். எந்த இடத்தில், எந்த நேரத்தில் நிகழ்ச்சிகள் என்றாலும் அவர்களின் பங்கேற்பு கண்டிப்பாய் இருக்கும்.
அவர்களிடத்தில் தடுமாற்றம் இல்லை, தள்ளாட்டம் இல்லை, கையில் கைத்தடி இல்லை, கண்ணுக்குக் கண்ணாடி இல்லை. ஆனால் இவைய னைத்தும் இளைஞர்களிடம் இருக்கிறது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் 150-க்கும் மேற்பட்ட படிப்பகங்களில் மிகச்சிறந்த சிலவற்றில் கிடாரங்கொண்டான் படிப்பகத்தையும் நான் பெருமையோடு பார்க்கிறேன். இன்றைக்கு நான்கு மாவட்டங்கள் சேர்ந்து குறுகிய நாட்களில், முதல் தவணையாக 200 சந்தாக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
விடுதலை நாளேடு 80 ஆண்டுகளை நோக்கி மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக விடுதலை நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக நம் ஆசிரியர் அவர்கள் இருப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய உலக சாதனையாகும். உலகில், இதற்கு முன்னால் யாராவது இத்தனை ஆண்டுகள் பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார்களா? என இணையத்தில் தேடினால், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் கிடைத்தார். ஆனால் அவர் ஆசிரியர் பொறுப்பில் 28 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்துள்ளார். ஆனால் நம் ஆசிரியரோ 50 ஆண்டுகள் பணியாற்றி, தொடர்ந்தும் பணியாற்றி வருகிறார். இது உலக சாதனை மட்டுமல்ல தோழர்களே, இது மட்டும் தான் உலக சாதனை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இதற்காகப் பெரும் விழாவை யும் நாம் எடுக்க இருக்கிறோம். காரணம் விடுதலை நாளேடு பகுத்தறிவு ஏடாக, அதுவும் தினசரி ஏடாக, 50,000 சந்தாக்களைக் கெண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதிநவீன தகவல் தொழில் நுட்பங்கள் அத்தனை யும் விடுதலை நாளேட்டின் இணையப் பக்கங்களில் காணலாம். இறுதியாக நம் தோழர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எண் ணற்ற தோழர்கள் எண்ணிக்கையில்லாத பொன் னாடைகளை எனக்கு வழங்கினீர்கள்.
அதற்குப் பதிலாகப் பணமாக வழங்கினால், அதுவும் விடுதலை வளர்ச்சிக்கு வழங்கினால், அது சமூக வளர்ச்சிக்குப் பயன்படும் எனக் கூறி முடிக்கிறேன்," என வீ.அன்புராஜ் பேசினார். முன்ன தாக திருவாரூர் மாவட்டம் 111 , நாகப்பட்டினம் மாவட்டம் 23, திருத்துறைப்பூண்டி மாவட்டம் 50 , மயிலாடுதுறை மாவட்டம் 13 ஆக மொத்தம் 200 சந்தாக்கள் முதல் தவணையாக வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும் உண்மை 12 , பெரியார் பிஞ்சு 9 , மாடர்ன் ரேசனலிஸ்ட் 1 ஆகிய சந்தாக்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், விடுதலை வாசகர் வட்டப் புரவலர் ஆர்.பி.சுப்பிரமணியன், திருவாரூர் நகர் மன்றத் துணைத் தலைவர் ஆர்.டி.செந்தில், திமுக செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி, திமுக நகரச் செயலாளர் இரா.சங்கர், நாகப்பட் டினம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் சி.பி.க.நாத்திகன், மண்டலச் செயலாளர் கி.முரு கையன் ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வுகளில் பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர்.ப.சுப்பிரமணியம், சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் அருளரசன், உரத்தநாடு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருணகிரி, கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பாண்டுரங்கன், வழக்கறிஞர் சுப.சிங்கார வேலன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வி.கே. எஸ்.அருள், புரவலர் எஸ்.என்.அசோகன், தி.மு.க. ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ஏ.தேவா, நகரமன்ற உறுப்பினர்கள் எம்.சம்பத், ஜமால் முகமது, கல்யாணி தங்கையன், மாநில தொழிலாளர் பேரவைத் துணைப் பொதுச் செயலாளர் க.கணபதி, மாவட்டத் துணைத் தலைவர் அ.கல்யாணி, பொதுக்குழு உறுப்பினர் வீ.மோகன், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.சீனிவாசன், நாகை மாவட்டச் செயலாளர் ந.செந்தில், மண்டல இளைஞரணி செயலாளர் பா.கவியரசன், மண்டல மாணவரணி செயலாளர் இரா.சுரேஷ், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் சு.மனோகரன்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அ.தவமணி, செயலாளர் சி.சரசு, நகை மாவட்ட அமைப்பாளர் கு.சிவானந்தம், மயிலாடு துறை மாவட்ட அமைப்பாளர் ச.மு.ஜெகதீசன், மாவட்டத் துணைச் செயலாளர் சு.ஆறுமுகம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் சித்தார்த் தன், செயலாளர் பொன்முடி, மாவட்ட இளைஞ ரணித் தலைவர் மருதூர் ராசி.கதிரவன், மகளிர் பாசறை மாவட்ட அமைப்பாளர் கோ.செந் தமிழ்ச்செல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.செல்வக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் க,வீரையன், நகர இளைஞரணி செயலாளர் துரைராஜன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி, கிடாரங்கொண்டான் ரெ.கலிய மூர்த்தி, அ.தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர்கள் 65 பேருக்கும் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தார். பின்னர் அனைவரும் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விவரம் வருமாறு: திருவாரூர் நகரம் - இராமசாமி, அறிவுக்கண்ணு, ஆத்மநாதன், கலியமூர்த்தி, முல்லை யம்பாள், இரத்தினம், சாமியப்பன், கார்த்திகேயன்.
திருவாரூர் ஒன்றியம் - கோவிந்தசாமி, பதி, அ.சுப்பிரமணியன், சி.சுப்பிரமணியன், மரியதாஸ், அருமைக்கண்ணு, நடேசன், உத்திராபதி, ஆறு முகம், சண்முகம், பாப்புசாமி, அருமைநாதன், பொன்னுசாமி, ஜெகநாதன், நாகராஜ், முத்துக் கிருஷ்ணன், பக்கிரிசாமி, ராகவன், பெரியசாமி, சேப்பையன், சாமிக்கண்ணு, நல்லமுத்து, சிலுவை நாதன், சீனிவாசன், முருகையன், பக்கிரிசாமி, குஞ்சு, அந்தோணிசாமி, வியாகுலசாமி, செல்வராஜ், நடேசன், அகமது. நன்னிலம் ஒன்றியம் : ஜெக நாதன், சாரங்கபாணி, கூத்தப்பெருமாள், பெரு மாள், வீரச்சாமி, மாறன், கணேசன். குடவாசல் ஒன்றியம் : கணபதி, கல்யாணி, சிவானந்தம், சேப்பெருமாள், பெரியான், செல்லமுத்து, நாடி முத்து, மணி, தங்கவேலு, குஞ்சு, செல்லமுத்து. கொரடாச்சேரி ஒன்றியம், பருத்தியூர் : தங்கராசு, அருணாசலம், பொன்னுசாமி, பெத்தை யன், பிச்சை, உத்திராபதி, கோவிந்தராஜ், பொன்னு சாமி, முருகன், உத்திராபதி, இராமலிங்கம். கண் கொடுத்தவனிதம் : கல்யாண சுந்தரம், காசி நாதன், செல்லையன், வடமலை, உத்திராபதி, பழனியப்பன், பிச்சை, லட்சுமணன், செல்லையன். விடயபுரம் : அம்மாசி, கருப்பையன். தக்களூர் : கிட்டு, முனியாண்டி, கலியபெருமாள், இராம லிங்கம், அரியமுத்து. ஆழத்தாங்குடி : சீனிவாசன், பக்கிரிசாமி. பெரியார் தெரு : குப்பு, வேலுச்சாமி. வடபாதி: மகாலிங்கம். காவாலகுடி : உத்திராபதி. வடக்கு சேத்தி: உத்திராபதி, சின்னப்பிள்ளை.
குதம்பைநயனார் கோயில் : ஜெகநாதன். திரு மாஞ்சோலை : முருகன், சிதம்பரம், முருகையன், தர்மலிங்கம், தங்கவேலு.
கொடிமங்கலம் : சிங்காரு, சவுந்தர்ராஜ். சோழச்சேரி: பிச்சை. திருமதிகுன்னம்: கருப்பையன். எருக்காட்டூர்: செல்வராஜ் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப் பட்டது.
நிகழ்வில் பங்கேற்க இயலாத ஏனைய பெரியார் பெருந்தொண்டர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் அருண் காந்தி வரவேற்புரை ஆற்ற, நகரத் துணைத் தலைவர் அ.அறிவுக்கண்ணு நன்றி கூறினார். நிகழ்ச்சிகளைப் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் இரா.சிவக்குமார், மாவட்டத் தலைவர் இரா.கோபால், மாவட்டச் செயலாளர் எஸ்.வி. சுரேஷ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.