எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்நாட்டில் பார்ப்பனர்களுக்குப் பார்ப்பனர் அல்லாத மக்கள் மீது இவ்வளவு ஆதிக்கம், அதாவது பார்ப்பனர்கள் 100க்கு 3 பேர்களாயிருந்தும், பாக்கி உள்ள மக்களை விடத் தாங்கள் பெரிய ஜாதி என்றும், மற்ற ஜாதி மக்கள் மோட்சத்திற்குப் போவதற்குத் தாங்களேதான் வழிகாட்டி கள் என்றும், தங்கள் மூலமேதான் எவரும் மோட்சத்திற்குப் போக முடியும் என்றும், மற்றும் எவன் எப்படிப்பட்ட பாதகமான பாவகாரியங்களைச் செய்தாலும், தங்கள் மூலமாக மன்னிப்புக்கேட்டு கொண்டால்தான் மன்னிக்கப்படும் என்று சொல்லிக்கொண்டு - உலக மக்கள் பாவத்தை அகலச் செய்ய, கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொண்டு, சரீரத்தால் பாடுபடாமல் வயிறு வளர்த்துக் கொண்டி ருப்பதற்குக் காரணம் தாங்கள் தவிர, மற்ற மக்களை ஆயிரக்கணக்கான பிரிவு களாகவும், நூற்றுக்கணக்கான உயர்வு, தாழ்வு படிகளாகவும் பிரித்து வைத்து, அவற்றை வெகு பத்திரமாகக் காப்பாற்றி வருவதையே மத தருமமாகக் கொண்டு, அதைப் பலப்படுத்தி பரிபாலிப்பதே கடவுள் தன்மையாக பிரச்சாரம் செய்து வருவதானால், அவர்களுக்கு மற்றவர்கள் மீது சுலபத்தில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

இதை ஒழிக்க வேண்டுமென்று பாடுபடுபவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருப்பதால், பார்ப்பனர்களுக்கும் அவர்கள் அடிமைகளாக பார்ப்பனரல்லாத சில காங்கிரஸ்காரர்களுக்கும், சுயமரியாதைக் காரர்கள் “ராட்சதர்”களாக, “அசுரர்”களாக, “அரக்கர்”களாகக் காணப்படுகிறார்கள்.

அதனாலேதான் சுயமரியாதைக்காரர்களோடு மற்ற யாராவது கிறிஸ்தவர் களோ, முஸ்லிம்களோ, ஆதி திராவிடர்களோ சேருகிறார்கள் என்றால், பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் ஆத்திரம் பொங்கி, அறிவில்லாமல் மானமில்லாமல் உளறி, தங்களின் முட்டாள்தனத்தையும், அயோக் கியத்தனத்தையும், இழி பிறப்பையும் காட்டிக் கொள்வதில் ஆச்சரியமில்லை.

‘குடிஅரசு’, 26.6.1938, தொகுதி 24, ப: 282.
க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி-624705.

Banner
Banner