எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாராட்டத்தக்கது
பட்டாசு வாங்கும் பணத்தில்
ஏழைக்கு வீடு கட்டிய பாதிரியார்

திருச்சூர், ஜன.1 லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, பட்டாசுகளை வெடிப்பதற்கு பதில் அந்தப் பணத்தில், வீடில்லாத ஏழை ஒருவருக்கு, சர்ச் நிர்வாகம் வீடு கட்டித் தந்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, மார்க்.கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில், செயின்ட் லாச்சேர்ஸ் சர்ச் உள்ளது.

இங்கு, புத்தாண்டை வரவேற்கும் வகையில், லட்சக்கணக்கான பணம் செலவழித்து, வாண வேடிக்கை நடத்துவது வழக்கம்.

வரும் புத்தாண்டு தினத்தன்று, வாண வேடிக்கைக்கு செல விடப்படும் தொகையில், வீடில்லாத ஏழை ஒருவருக்கு வீடு கட்டித் தரலாம் என, சர்ச் பாதிரியார் கருத்து தெரிவித்தார்.

இதற்கு, கிறிஸ்தவர்கள் சம்மதம் தெரிவித்ததுடன், அதிகளவில் நன்கொடையை வழங்கினர்.இதையடுத்து, பொறிஞ்சுகுட்டி தாமஸ் என்பவருக்கு வீடு கட்டித் தரப்பட்டதுடன், மீதமுள்ள தொகை, அவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.


10 ஆண்டுகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்ட அவலம்

புதுடில்லி, ஜன.1 தமிழகத்தில், பல பிரச்னைகளால், 10 ஆண்டுகளாக, 8.67 லட்சம் பேர், விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.

தமிழகத்தின், பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக விவசாயம் விளங்கியது. தென் தமிழகத்திற்கு உணவு வழங்கும் நெற்களஞ்சியமாக, தஞ்சை திகழ்ந்தது.  ஆனால், இன்று விவசாயத்திற்கு தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகும் நிலையுள்ளது. பல விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கிறது. விவசாயம் இழப்பு தரும் தொழிலாக மாறி வருகிறது; பலர், வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.

இதுகுறித்து, மத்திய அரசின் நதிநீர் இணைப்பு கமிட்டி உறுப் பினர், ஏ.சி.காமராஜ் கூறியதாவது: தஞ்சை, நாகை மாவட்டங்களில் விவசாயம் பொய்த்ததால், விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் தொடர்கிறது. நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். 10 ஆண்டுகளில் மட்டும், 8.67 லட்சம் பேர் விவசாயத்தை கை விட்டுள்ளனர்.  விவசாயத்திற்கு அடிப்படை தேவையான தண் ணீரை வழங்கவும், விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவும்,

தமிழக அரசு  நடவடிக்கை
எடுக்க வேண்டும்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் விவசாயம், மின் உற்பத்தி, போக்குவரத்து போன்ற பயன்பாட்டிற்கு, நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவது தான், இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


அய்யப்பன் காப்பாற்றவில்லையே! தமிழக  பக்தர்கள் 20 பேர் காயம்

திருவனந்தபுரம், ஜன.1 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிலர் ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

இந்த வேன் திருவனந்தபுரம் அருகே உள்ள பத்தனாபுரத்தில் சென்ற போது ஒரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உள்பட 20 பக்தர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனே மீட்கப்பட்டு திருவனந்த புரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் வேன் ஓட்டுநரான பாலக்காட்டை சேர்ந்த சந்திரன் (வயது 56) என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவக்கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner