எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்ற ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் கொலை
வாஷிங்டன், ஜன.1 சென்ற 2016- ஆம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட் டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவர் பிலிப் லீருத் தெரிவித்ததாவது: வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் சென்ற 2016-ஆம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் இரு வெவ்வேறு விமான விபத்துகளில் பலியாகினர்.

2015-ஆம் ஆண்டில் பலியான பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 112-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது சென்ற ஆண்டில் பத்திரிகையாளர் களின் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.

சென்ற ஆண்டில் இராக்கில் அதிகபட்சமாக 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஆப்கானிஸ்தானில் 13 பேரும், மெக்சிகோவில் 11 பத்திரிகையாளர்களும் செய்திகள் சேகரிக்கும் பணிகளின் போது உயிரிழந்தனர்.

கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 20 பிரேசில் பத்திரிகையாளர்களும், அண்மையில் ரஷ்யாவில் நிகழ்ந்த ராணுவ விமான விபத்தில் ஒன்பது ரஷ்ய பத்திரிகையாளர்களும் பலியான தாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிலிப் தெரிவித்தார்.

ஈராக் குண்டு வெடிப்புகளில் 28 பேர் பலி

பாக்தாத், ஜன.1 ஈராக்கில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய இரு குண்டு வெடிப்புகளில் 28 பேர் பலியாகினர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

தலைநகர் பாக்தாத் அருகேயுள்ளது அல்-சினாக் சந்தைப் பகுதி. கார் உதிரி பாகங்கள், உணவு, உடை, வேளாண் பொருள்களை விற்பனை செய்யும் ஏராளமான அங்காடிகள் நிறைந்த பகுதியாகும் இது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த சந்தைப் பகுதியை குறிவைத்து சனிக்கிழமை காலை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினர்.

இதில், 28 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 54 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, அதே இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. சாலையோர குண்டு வெடிப்பு என அதனை காவல்துறையினர் குறிப்பிட்டனர். ஆனால் இரு குண்டு வெடிப்புகளும் தற்கொலைத் தாக்குதல் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்தவொரு பயங்கர வாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. இருப் பினும், பாக்தாத் தலைநகரை குறிவைத்து அண்மைக் காலமாக அய்.எஸ். பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் அவர்களே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner