உணவு பாக்கெட்டுகளில் கலோரி அளவை குறிப்பிடுவது தற்போது கட்டாயமாக்கப்பட் டுள்ளது. வெளிநாடுகளில் மக்கள் சாப்பிடும் உணவு தொடர்பாக அரசுகள் கடுமையாக நடந்து கொள்ளும். அதன் தரம், தகுதி அரசு நிர்ணயித்த நிலையில் இருக்க வேண்டும். இந்தியாவில் தற்போது இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படு கிறது. இனிமேல் நாம் வாங்கும் பிஸ்கெட் முதல் உணவு பாக்கெட் டுகள் வரை அதில் இடம் பெற்றுள்ள வேதிப்பொருட்கள், சத்துப்பொருட்கள் உள்ளிட்ட அளவு விவரங்கள் வெளியிடப் படுவது கட்டாயமாக்கப்பட் டுள்ளது.
ஒரு பொருளின் விலை எப்படி கட்டாயமாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டுமோ அதேபோல் இனி பொருட்களில் உள்ள கலோரி அளவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுவும் உணவு பாக்கெட்டுகளில் முன்பக்கத்தில் அந்த அளவு விவரங்கள் இடம்பெற வேண்டும். விலை பட்டியல் தற்போது பின்புறம் அச்சிடப்பட உள்ளது.
இதற்கு ஏற்றார்போல் ஒவ் வொரு உணவு தயாரிப்பு நிறு வனங்களும் தங்கள் பொருட்களில் புதிய நடைமுறையை பின்பற்றி வருகின்றன. குறிப்பாக அமிலம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்று இருந்தால் அதைப்பற்றி விரிவாக குறிப்பிட வேண்டும், அதனால் எந்த பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தற்போது அனைத்து நிறுவனங்களும் பின்பற்றி வரு கின்றன. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் கலோரி அளவுகளை அறிந்து தேர்வு செய்யும் வகையில் தற்போது இந்த நடவடிக்கை முறைப்படுத்தப் பட்டுள்ளதாக வும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு வருவதா கவும் நிறுவனங்கள் தெரிவித்துள் ளன.