எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவனந்தபுரம், ஜன.1 ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் சிர மத்தை சந்தித்து வருகிறார்கள்.

மேலும் கூட்டுறவு வங்கி கள் மூலம் பணப் பரிவர்த்த னைக்கும் தடை விதிக்கப்பட் டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.  .

இந்த நிலையில் ரூபாய் நோட்டு செல்லாது பிரச்சினை யால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்படுவதால் மத்திய அரசைக் கண்டித்தும் இந்த நடவடிக்கையை திரும்பப் வாபஸ் பெறக் கோரியும் கேரளாவில் நேற்றுமுன்தினம் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட் டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதல் அமைச்சரும் மூத்த தலைவரு மான அச்சுதானந்தன், மாநில தலைவர் கொடியேறி பாலகி ருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண் டனர். அவர்கள் அனை வரும் கை கோர்த்து நின்றபடி மத்திய அரசை கண்டித்து முழுக் கங்களை எழுப்பினார்கள்.

அவர்கள் தலைநகரான திரு வனந்தபுரத்தில் இருந்து காசர் கோடு வரை நீண்ட வரிசையில் கைகோர்த்து நின்றனர். சுமார் 700 கிலோ மீட்டர் தொலை வுக்கு இந்த மனிதசங்கிலி இருந்ததாகவும் 10 லட்சத்திற் கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றதாகவும் மாநில செய லாளர் கொடியேறி பாலகிருஷ் ணன் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner