எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இட்டமொழி, ஜன.1- மழை பெய்ய வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனராம்!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தாண்டு பருவமழை இன்றி பொது மக் களும், விவசாயிகளும் தவித்து வருகின்றனர். இன்னும் 10 நாள் களில் மழை பெய்யாவிட்டால் குடிநீருக்காக தாமிரபரணியை நம்பி உள்ள நெல்லை, தூத்துக் குடி மாவட்ட மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் சிரமப் படும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு மக்கள் தங்கள் தெய் வங்களை நம்பி வழிபாடு நடத்தி வருகின்றனர். சிலர் வினோத முறையில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி மழை வராதா எனவும் காத்திருக்கின்றனர்.

கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தால் மழை பெய் யும் என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சேரகுளத்தை அடுத்த சின்னார்குளம் கிராம மக்களும், விவசாயி களும் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதற்காக திருமண அழைப் பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப் பட்டது. சின்னார்குளம் வெற்றி விநாயகர் கோவில் முன்பு மேடை அமைக்கப்பட்டது. ரேடி யோவில் மங்கள இசை இசைக்கப்பட்டது. தொடர்ந்து பெண் கழுதைக்கு மஞ்சள் நிற பட்டுசேலை உடுத்தியும், ஆண் கழுதைக்கு பட்டு வேட்டி கட் டியும் தனித் தனியாக மேள தாளம் முழங்க அழைத்து வந் தனர். சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கழுதைகளுக்கு பின்னால் ஊர் வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு குலவை சத்தம் முழங்க பெண் கழுதைக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கிராம மக்கள் வரிசை யாக நின்று மொய் எழுதினார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய வர் அரங்கமன்னார் தலைமையில் பெரிய இசக்கி, இருளப்பன், சண்முகவேலா யுதம், நெல்லையப்பன், பழனி வேல், சுப்பிரமணியன், ராமன் உள்பட கிராம மக்கள் செய்து இருந்தனர்.

(‘சாந்தி முகூர்த்தம்’ அன் றைக்கே நடந்துவிட்டதா என்று தெரியவில்லை).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner