எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்யப்பன் என்ன செய்கிறாரோ?

சபரிமலையில் அப்பம் தயாரிப்பில் குளறுபடி!

தயாரிப்பு நிறுத்தம் - நீதிமன்றம் நாடும் தேவஸ்வம் போர்டு

திருவனந்தபுரம், ஜன.2 வருவாய்த்துறை தடையால் சபரிமலையில் பிரசாதமாக வழங்கப்படும் அப்பம் தயாரிப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு வழக்கு தொடர முடிவெடுத்துள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை விழா முடிந்து அடைக்கப்பட்ட நடை, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30- ஆம் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகளும்,   வருகிற 14-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சபரிமலை மகர ஜோதி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சபரிமலை சென்றுள்ள பக்தர்கள் ஊர் திரும்பாமல் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரி மலையிலேயே தங்கி உள்ளனர். இதனால் சபரிமலையில் லட்சக்கணக்கானவர்கள் தங்கி இருப்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவில் பிரசாதங்களாக அப்பம், அரவணை, உண்ணியப்பம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மண்டல பூஜை காலத்தில் பக்தர்களுக்கு போதுமான அளவு அரவணை வழங்க முடி யாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் வெளியானதை தொடர்ந்து மாநில அரசு தட்டுப்பாடு இன்றி அரவணை வழங்க நட வடிக்கை எடுத்தது.

வருவாய்த்துறையினர் ஆய்வு-

அப்பத்துக்குத் தடை

தற்போது கோவிலில் அப்பம் வழங்குவதிலும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. வழக்கமாக சபரிமலை அய்யப்பனுக்கு பக்தர்கள் வழங்கும் பச்சரிசியில் இருந்தே அப்பம் தயாரிக்கப்படும். அண்மையில் அப்பம் தயாரிக்கும் பணியை கேரள வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பச்சரிசியை நன்றாகக் கழுவி உலர வைத்து அதன் பிறகே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனை கோவில் ஊழியர்கள் முறையாக பின்பற்றவில்லை என கூறி கடந்த வாரம் அப்பம் தயாரிப்புக்கு வருவாய் அதிகாரிகள் தடை விதித்தனர்.

பச்சரிசியை வெளி மார்க்கெட்டில் இருந்து வாங்கி பயன்படுத்தவேண்டும் என்று உத்தர விட்டனர். இதனால் சபரிமலையில் அப்பம் தயாரிக்கும் பணி தடைபட்டது.

வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அப்பம் வழங்கப்படும். தற்போது அதிகாரிகளின் உத்தரவால் அப்பம் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால், இதனை பக்தர் களுக்கு வழங்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

தடைக்கு எதிராக வழக்காம்

அதிகாரிகளின்உத்தரவைரத்துசெய்யகோரி சபரிமலைகோவிலைநிர்வகிக்கும்திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் உயர்நீதிமன்றத் தில் மனு செய்ய முடிவு செய்துள்ளனர்.

மகர விளக்கு பூஜைக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரி கள் வலியுறுத்தி உள்ளனர்.

சபரிமலையில் இவ்வளவு பிரச்சினைகள்  நடை பெற்று வருகிறது; அய்யப்பன் என்ன செய்கிறாரோ?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner