எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, மார்ச் 30
தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டக் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வரும் சனிக்கிழமை (ஏப்.1) முதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் (ரேஷன் அட்டைகள்) பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக குடும்ப அட் டைகள் புதுப்பிக்கப்படாமல், ஒவ்வோர் ஆண்டும் உள்தாள் ஓட்டி கால நீட்டிப்பு செய்யப் பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக் கவும் அத்தியாவசியப் பொருள் கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.

குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டு வடிவில் அமைக்க ரூ.320 கோடி ஒதுக்கப் பட்டது. குடும்ப அட்டை தாரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர் களை ஆதார் அட்டையிலிருந்து இணைக்க வசதியாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் சிறிய ஸ்கேனிங் கருவி வழங்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக ஆதார் விவரங்கள் குடும்ப அட்டை விவரங்களுடன் இணைக்கப் பட்டன.

குடும்ப அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு அவற் றை விநியோகிக்கும் நிலை எட் டப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் 10 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன.

தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் வருவாய் வட்ட வாரியாக நான்கு அல்லது ஐந்து மய்யங்கள் அமைத்து, அங்கு பொதுமக்களை வரவழைத்து பழைய குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொண்டு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பணியில் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner