எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாமக்கல், மார்ச் 31இந்தியாவில் ஆண்டுதோறும்40,000 குழந்தைகள் கடத்தப்படுகின்ற னர்என்றும்,இதில்11,000 குழந்தைகளை மீட்க முடிவ தில்லை என்றும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல்லில் பெண்களுக் கான கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (30.3.2017) நடைபெற்றது.

ஜெனீவா குளோபல் தன் னார்வ நிறுவன ஆலோசகர் பி.பாலமுருகன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் பி.பிரபு, ஆள் கடத்தல் தடுப்பு காவல் உதவி ஆய்வாளர் டி.தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர்.

அந்தக் கூட்டத்தில் பி.பால முருகன் பேசியதாவது:

மனித ஆள் கடத்தல் சர்வ தேச பிரச்சினையாக உள்ளது. தேசியகுற்றஆவணக்காப் பகபுள்ளிவிவரப்படிஆண்டு தோறும்காணாமல்போனவர் களின் மொத்த எண்ணிக்கை யில் 10 சதவீதம் பேர் வெளி நாடுகளுக்கும், 90 சதவீதம் பேர் மாநிலங்களுக்கும் கடத் தப்படுகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் பாலியல் தொழிலுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் பேர் பிற தொழில் களில் ஈடுபடுத்தவும் கடத்தப் படுகின்றனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம், மனித உரிமைகள் ஆணையக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 40,000 குழந்தைகள் வரை கடத்தப்படுகின்றனர். இதில் 11,000 குழந்தைகள் வரை மீட்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி குழந்தை கடத்தல் தொடர்பாக 6,877 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 96 சதவீதம் அதிகம்.

இந்தியாவில் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரம், ஆந்திரம், கர் நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஆள் கடத்தல் அதிகமாக உள் ளது. ஆள் கடத்தல், குழந்தை கடத்தலைத் தடுக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவை சட்டமாக்க அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner