எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, மார்ச் 31 திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸ்மாயில் ஆகியோருக்குஅரசியல்மற்றும் பொதுவாழ்வில் நேர் மைக்கான விருது வழங்கப்பட்டது. சென்னையில்நேற்று(30.3.2017) மாணிக்சர்க்காருக்குமனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் வி.வசந்திதேவியும், முகமது இஸ்மாயிலுக்கு தென்னிந்திய திருச்சபை பேராயர் தேவ சகா யமும் விருதுகளை வழங்கினர்.

தனியார் விழாவில் மாணிக் சர்க்கார் பேசியதாவது:

நாடுசிக்கலானகாலகட் டத்தைக் கடந்து கொண்டிருக் கிறது. மக்களிடம் குழப்பத் தையும், பகை உணர்வையும் வளர்த்து இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். இந்து மதத் துக்கு முன்பு வேறு எந்த மதமும் இருந்ததில்லை என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பதை தெளிவாகக் கூறுகிறது. அனை வருக்கும் சம உரிமையை அது உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மாற்ற முயற் சிக்கின்றனர். அதற்காக சிறு பான்மையின மக்களை ஒடுக் குவதற்கான யுக்திகளை அவர் கள் கையாளுகின்றனர்.

அத்தியாவசியப் பொருட் கள் விலையேற்றம், பண மதிப்பு நீக்கம், பணவீக்கம், வேலையின்மை போன்ற பிரச் சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பு வதற்காகவே இந்து ராஜ்ஜியம் என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். கடன் தொல்லை காரணமாக ஏராள மான விவசாயிகள் தற்கொலை செய்து கெண்டுள்ளனர். திரிபுரா மாநிலத்தில் இக் காரணத்துக்காக ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை.

ஜனநாயகம், மதச்சார் பின்மை இல்லாவிட்டால் நாட்டில் ஒற்றுமை இல்லாமல் போய்விடும். எனவே ஆசிரி யர்களும் பெற்றோர்களும் மாணவர்களை நாட்டுப்பற்று மிகுந்த, மனிதாபிமானம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். காயிதே மில்லத் போன்றவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கூறி மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற வேண்டும். அதற்காக தமிழகத் தையும் தாண்டி இந்த அறக் கட்டளையின் பணிகள் விரிவு படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner