எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பார்ப்பனீயம் தனது சித்து வேலையை லாவகமாக செய்து வருகிறது. அதன் ஒரு முயற்சி தான், தந்தி டிவியில் பாண்டே மூலமாக ஒரு திடீர் கருத்துக்கணிப்பு.

எதைப் பற்றி?

அடுத்த முதல்வர் யார்? 98 தொகுதிகளில் யாருக்கு ஆதரவு? 122 தொகுதிகளில் யாருக்கு ஆதரவு? உடைந்து போன பன்னீர் அணி 11 தொகுதிகளில் யாருக்கு ஆதரவு?

இப்போது இதற்கு என்ன அவசியம்? அங்கே தான் பார்ப்பனீயம் நிற்குது.

ஏப்ரல் 12-ஆம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த கருத்துக் கணிப்பை தந்தி டிவியில் பாண்டே மூலமாக நடத்தி, பன்னீர் மீது ஒரு புனித பிம்பத்தை உருவாக்க முயல்கிறது. ஆர்.கே. நகரில் பன்னீர் அணி வெற்றி பெற்றால், அதை வைத்து, ஆட்சி மாற்றம் ஏற்படவும், பன்னீரை தற்போது தலைமைக்கு பயன்படுத்தி, பின்னர் அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கிட பார்ப்பன ஜனதா கட்சி திரை மறைவு வேலையை செய்வது நன்றாக அம்பலம் ஆகிறது.

திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலினை விட பன்னீர் அதிக செல்வாக்கு உள்ளவர் என கட்டமைக்க அத்தனை வேலைகளையும் செய்து வருவதை, திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

பன்னீரின் முகத்திரையை எளிதாக கிழித்து எறிய வேண்டிய பணியை திமுக சற்று தாமதமாக எடுத்ததன் விளைவுதான் இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, இந்த பன்னீர் உட்பட சிலர் ஒரு மூன்று மாதங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் ஆக்கப்பட்டார்கள். அப்போது ஊடகங்களில் என்ன செய்தி வந்தது? கார்டனுக்குத் தெரியாமல், பன்னீர் அண்ட் கோ பணம் சுருட்டி உள்ளது தெரிய வந்ததால் இந்த முடக்கம் என்றார்கள்.இதுவரை இதற்கு பன்னீர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இவர் முதல்வராக இருந்து சாதித்தது என்ன? தமிழ் நாட்டை நான்கு லட்சம் கோடிக்கு கடனாளி மாநிலமாக ஆக்கியதைத் தவிர? சேகர் ரெட்டி ரெய்டு, அன்பு நாதன் ரெய்டு எல்லாமே பன்னீர் முதல்வராக இருந்தபோது தானே நடந்தது. இது சம்பந்தமாக இவரது விளக்கம் என்ன?

அப்பல்லோ மருத்தவமனையில் 75 நாட்கள் வாசலில் நின்று, அம்மா நலமாக இருக்கிறார் என்று செய்தி சொல்லிவிட்டு, இப்போது என்னையே அனுமதிக்கவில்லை என ஒரு முதல்வராக இருந்தவர் சொல்கிறார் என்றால், கேட்பவர்கள் எல்லாம் வடிகட்டிய முட்டாள்களாக நினைக்கிறார் என்று தானே பொருள்? அடிமைத்தனத்தைத் தவிர எந்த தகுதியும் இல்லாத ஒருவர், திமுகவின் செயல்தலைவராக, மக்கள் பிரச்சினையில் அன்றாடம் தலையிட்டு தீர்வு காண முனையும் ஸ்டாலினைவிட அதிக செல்வாக்கு உள்ளவராக பிம்பம் உருவாகிட, நம்ம ஆள் நடத்தும் டிவியிலேயே, பாண்டேவின் மூலமாக பார்ப்பனீயம் முனைகிறது போலும்!.

இது ஒரு முயற்சிதான், கருத்துக் கணிப்பு எனும் பெயரில் தந்தி டிவியில் பாண்டே வெளிப்படுத்தும் திணிப்பு.

- குடந்தை கருணா -

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner