எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, மார்ச். 31
கர்நாடக மாநிலம் பத்ராவதி யில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு ஆலை, சேலம் இரும்பு ஆலை மற்றும் மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் அலாய் இரும்பு ஆலை ஆகிய நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு மத் திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

துர்காபூர் அலாய் இரும்பு ஆலை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருகிறது. ரூ.400 கோடி முத லீடு செய்தபிறகும், கடந்த 10 ஆண்டுகளில் விஸ்வேஸ்வரய்யா இரும்பு ஆலை நட்டத்தில் இயங்குகிறது.

அதேபோல நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத் திட்டத் தின் கீழ் சுமார் ரூ.2,200 கோடி முதலீடு செய்தபிறகும் சேலம் இரும்பு ஆலை கடந்த 5 ஆண்டு களாக நட்டத்தில் இயங்கி வருகிறது. செயில் நிறுவனத் தின் இந்த 3 துணை நிறுவனங் களும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் இதன் பங்குகளை தனியாருக்கு விற்கும் அனைத்து நடைமுறை களும், பரிவர்த்தனை ஆலோ சகர், சட்ட ஆலோசகர் மற்றும் சொத்து மதிப்பீட்டாளர் ஆகி யோர் உதவியுடன் மேற்கொள் ளப்படும். பரிவர்த்தனை ஆலோசகர், சட்ட ஆலோசகர் மற்றும் சொத்து மதிப்பீட்டாளர் ஆகியோர் நியமனம் செய் வதற்கான வேண்டுகோள் திட்ட அறிக்கை செயில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் பத்தி ரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner