எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பனாஜி, மார்ச் 31 நடந்து முடிந்த அய்ந்து மாநில சட்ட சபை தேர்தலில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பா.ஜ.க, மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் உதவி யுடன் ஆட்சியமைத்தது.

குறிப்பாக கோவா மாநி லத்தில் மொத்தமுள்ள 40 சட்டசபை தொகுதிகளில் 13 இடங்கள் மட்டுமே வென்ற பா.ஜ.க, பெரும்பான்மைக்கு தேவையான 22 இடங்கள் இல்லாததால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 பேரின் ஆதரவுடன் அரசை அமைத்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் அரசுக்கு வெளிப்படையான ஆதரவை அளித்தார்.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கோவா மாநிலத் திற்கு அடுத்தமாதம் 9-ஆம் தேதி வர உள்ள நிலையில், அவர் மாநில மக்களின் விருப் பத்தை மீறி ஆட்சியமைத்தற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் மாநில செயலாளர் கிரிஷ் சோதங்கார் கூறியுள்ளார். இதுகுறித்து பனா ஜியில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

கடந்த 2012 சட்டசபை தேர் தலில் 21 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க, தற்போது 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, மக்கள் அவர்களை புறக்கணித்ததையே இது காட் டுகிறது. பின்வாசல் வழியாக வந்து ஆட்சியமைத்த அவர்கள் வெற்றியை கொண்டாட தகுதி யற்றவர்கள். 17 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைத்தான் ஆட்சியமைக்க ஆளுநர் முதலில் அழைத்திருக்க வேண்டும். பா.ஜ.க ஆளுநரை தவறாக பயன்படுத்தி கோவா வில் ஆட்சியமைத்துக் கொண் டது. இதற்காக மாநில மக்களி டம் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும்
அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 31 சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்தியநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதில், சிட்லப்பாக்கம் ஏரி நிரம்பியது.

ஏரியில் இருந்து வெளியே றிய தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வெள்ளக் காடானது. ஏரியை பலர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட் டிடங்களை கட்டியுள்ளதால், இந்த நிலை ஏற்பட்டது. எனவே, புதிய கட்டிடங்களை அங்கு கட்டுவதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண் டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய கட்டி டங்களை அப்பகுதியில் கட்டு வதற்கு தடைவிதித்து உத்தர விட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமை யாக அகற்றவேண்டும். அவ் வாறு அகற்றிய பின்னர், அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். மேலும், ஏரியில் புதிய கட்டு மானங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஜூன் 12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி உத்தரவால் அசைவமின்றி தவிக்கும் மாணவர்கள்

லக்னோ, மார்ச் 31 உத்தர பிரதேசத்தில் புதிய முதல் அமைச்சராக பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத் அனுமதி இல்லாத ஆடு, மாடு வெட்டும் கூடங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றை மூட உத்தர விட்டார்.

இதனை எதிர்த்து இறைச்சி விற்பனையாளர்களும், அசைவ உணவகங்களும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.இதனால் திருமணங்களிலும் அசைவத் திற்குப் பதிலாக சைவ சாப் பாடு பரிமாறப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் உத்தரவால் கல்லூரி மாண வர்கள் அசைவமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலை மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்க முடியாததால் சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாண வர்கள் விரக்தி அடைந்துள்ள தாக பல்கலைக்கழக உணவக பொறுப்பாளர் இம்தியாஸ் அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகை யில் தொடர்ந்து 3-4 நாட்களாக சைவ உணவை வழங்கி வரு கிறோம். இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner