எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கடந்த அய்ந்து ஆண்டு காலமாக இந்திய குடியுரிமைப் பணி மற்றும் அது போன்ற உயர் பதவிகளைப் பெறுவதை  எதிர்பார்த்துக் காத்திருந்த இதர பிற்படுத்தப்பட்டவர்களில் பல ரும் நிராகரிக்கப்பட்டதற்குப் பின்ன ணியில் இருந்த மிக முக்கியமான காரணமாக இருந்த, பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களின் குழந்தைகளுக்கு கிரீமி லேயரைக் கணக்கிடும் மத்திய அரசின் அளவு கோலையும், நடை முறையையும் டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடி இருக்கிறது.

கடந்த வாரம் அளிக்கப்பட்ட மிகமிக முக்கியமான தீர்ப்பு ஒன்றில், மனுதாரர்களின் கிரீமி லேயரை எட்டு வார காலத்திற்குள்  மறுபடியும் மாற்றி கணக்கிடுமாறு மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முன்னர் நிராகரிக்கப்பட்ட தாங்களும் குடியுரிமைப் பணிகளில் சேருவதற் கான நம்பிக்கையை அவர்களுள் மீண்டும் ஏற்படுத்துவதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

மண்டல் குழு பரிந்துரைகளின்படி நியமனம் பெறத் தகுதி உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்ப தாரர்களில் உள்ள வசதி படைத்த தனி நபர்கள் யார் என்பதைத் தீர்மானம் செய்வதற்காக, அவர்களது குடும்ப வருமானத்தைக் கணக்கிடும் முறை தான் இந்த கிரீமி லேயர் என்பது.

மத்திய குடியுரிமைப் பணிகளுக்கு வருவதற்கு வர விரும்பும்  தகுதியுள்ள  இதர பிற்படுத்தப்பட்டவர்களிடையே  டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் பாதிப்புகளை ஏற்படுத் துவதாக  அமைந்துள்ளது.

கிரீமி லேயரின் அடிப்படையில் நிராகரிக்கப்படுவதற்கு முன்பு,  2015 ஆம் ஆண்டில் மத்திய குடியுரிமைப் பணி தேர்வுகளின் முடிவில் தேர்ந் தெடுக்கப்பட வேண்டிய 12 இதர பிற் படுத்தப்பட்ட மனுதாரர்கள் சம்பந்த மான இந்தத் தீர்ப்பு, கடந்த சில ஆண் டுகளில் நிராகரிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் வழக்குகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முக்கியமாக, பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு கிரீமி லேயரைக் கணக்கிடுவதற்கு மத்திய அரசு கடைபிடித்து வரும் அளவு கோல் மற்றும் நடைமுறை மீது இந்தத் தீர்ப்பு ஒரு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

கிரீமி லேயரின் கீழ் வருவோர் மற்றும் வராதவர் ஆகிய இரு தரப்பு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒரே மாதி ரியான அளவுகோலைப் பயன்படுத்த வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பினைப் போன்றதுதான் டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும். கிரீமிலேயரைக் கணக்கிட்டு தீர்மானிப்பதற்காக பின்பற்றப்படும் மாறுபட்ட கொள்கைகளைச் சுற்றி இருப்பது இந்த முரண்பாடு.

அரசின் வழிகாட்டுதல்களின்படி, ஏ மற்றும் பி குழுக்களைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த பணியாளர்களின் குழந்தைகள் மண்டல் குழுவின் பரிந்துரைகளின்படி இட ஒதுக்கீடு பெறத் தகுதி அற்றவர்கள் என்றும்,  ஆண்டு வருவாய் 8 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இல்லாத மற்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் குழந்தைகள் இட ஒதுக்கீடு பெறத் தகுதி உடையவர்கள் என்றும் அரசின் வழிகாட்டும் நடைமுறைகள் தெரிவிக் கின்றன. ஆண்டு வருவாய் கணக் கிடும்போது, பெற்றோரின் சம்பளம் கணக்கில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை.

பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்களின் குழந் தைகளுக்கு கிரீமிலேயரைக் கணக் கிடும்போது, அவர்களது சம்பளத்தை யும் சேர்த்து கணக்கிடப்படும் போது,  மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணி யாற்றும் பெற்றோரின் குழந்தைகளின் கிரீமி லேயரைக் கணக்கிடும் போது மட்டும் அவர்களது சம்பளத்தையும் சேர்த்துக்  கொள்ளப்படுவதில்லை என்பதால்,  பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களின் குழந்தைகள் ஒரு பாதகமான விளைவுக்கு உள்ளாகின் றனர்.

பொதுத் துறை நிறுவனத்தில் பணி யாற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரி வினரைச் சேர்ந்தவர்களின் குழந்தை களின் கிரீமி லேயரைக் கணக் கிடுவதில், 2004 அக்டோபர் 14 அன்று அரசினால் வெளியிடப்பட்ட கொள் கையே பின்பற்றப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அதற்கு மாறாக, இந்த 2014 அக்டோபர் 14 அன்றைய அரசு ஆணை பொதுத் துறை ஊழியர்களுக்கும், அரசு ஊழி யர்களுக்கும் இடையே  வேறுபாடு காட்டுவதால் அது நீக்கப்பட வேண் டும் என்று மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்ட  நீதிமன்றம் அதன்படி அந்த அரசு ஆணையை ரத்து செய்தது.

அரசின் கீழ் பணியாற்றும் பெற் றோரின் வருவாயில் அவர்களது சம்பளம் கிரீமி லேயரைக் கணக்கிடும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாமல் இருக்கும்போது, பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெற்றோரின் சம்பளத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது என்பது, கிரீமி லேயரை அடையாளம் காண்பதற்கான ஒரு சோதனை,  பகை மனப்பான்மை கொண்ட வேறுபாட் டினை வெளிப்படுத்துவதாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2017 இல் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மத்திய அரசு எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த கிரீமிலேயர் குழப்பம் உருவாவதற்குக் காரணமே,  பொதுத் துறை நிறுவனங்களின் ஏ, பி, சி மற்றும் டி குழுக்களின் கீழ் வரும் பணி யிடங்கள் தொடர்பாக, அரசின் கீழ் வரும் பணியிடங்களைப் போல, பதவி களின் சமநிலை என்று அழைக்கப் படும் ஒரு நடைமுறையை மத்திய அரசு தீர்மானிக்கத் தவறியதன் விளைவே ஆகும்.

நன்றி:  'தி டைம்ஸ் ஆப் இந்தியா' 26-03-2018

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner