எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்ப்பனர்கள் மத்திய ஆசியப் பேரினத்தின் ஒரு கிளையினர். இவர்களில் இருந்தே பாரசீகரும் இந்தோ ஜெர்மானிய இனத்தவரான மீடுகளும், ஆசியாவில் உள்ள ஈரானியர்களும், கிழக்கு அய் ரோப்பாவில் உள்ள மக்கள் இனமும் உருவாயின. இதற்கு ஆதாரமாக, சிந்து, பாரசீகம், சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கும் அய்ரோப்பிய மொழிகளுக்கும் உள்ள நெருக்கத்தையும், பொதுப்பண்புகளையும் காணலாம். அமைதியான முறையில் குடியேறி வாழும் நோக்கத்துடன் ஆரியர் இந்தியாவுக்குள் நுழையவில்லை. மாறாக வெறியாளர்களாகவே நுழைந் தார்கள். தங்களைப் பற்றி மிக உயர்ந்த நினைப்பில் ஊறித் திளைத்த இனமாகவே, மிகுந்த சூழ்ச்சியும், திமிரும், வீம்பும் கொண்ட இனமாகவே அவர்கள் இருந்தார்கள்.

தேவர்களுக்கும், ராட்சசர்களுக்கும் இடையில் நடந்த போர்கள் பற்றிய நூல்கள் பழங்காலப் போராட்டத்தைக் குறிக்கின்றன. இந்தப் பூமியிலே இருக்கும் கடவுள் களாக்கப்பட்டுள்ள பார்ப்பனரை எதிர்த்துப் போரிட்ட பூர்வீகக் குடிகள் ராட்சசர்கள் என்று அவர்கள் எழுதிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் குடியேறிய அய்ரோப்பியக் குடியேறிகள் அங்கிருந்த அமெரிக்க செவ்விந்தியர் மீது நடத்திய கொடுமைகளைப் போன்றது பார்ப்பனர்கள் நம்மீது நடத்தும் ஆதிக்கம்.  ஜோதிராவ் புலே எழுதிய குலாம்கிரி (அடிமைகளின் முழக்கம்) நூலிலிருந்து