எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஆக. 25- அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து கூறியபோது அவர் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட பாகிஸ்தானின் பங்கு குறித்து விவாதித்தார்.

பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப் புகளின் மீதும் ஒரு திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தத் தகவலை அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சிறீதர் நியூரெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை இம்ரான் கான் அரசு மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுற வுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறும் போது, “அமெரிக்க அமைச்சர் பாம்பியோ பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் பயங்கரவாதிகள் மீது திடமான நடவடிக்கை குறித்து பேசப்படவில்லை. எனவே இது குறித்து சரியான திருத்தத்துடன் அமெரிக்கா அறிக்கை வெளியிட வேண்டும்” என வலிறுத்தியுள்ளார். அது டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ஆம் தேதி இசு லாமாபாத் வருகை தர உள் ளார். புதிய பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இந்த நிலை யில் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள் ளது சர்ச்சையை உருவாக்கியுள் ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner