எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 25- அதிநவீன தொழில்நுட்பங்களை அடிப்படை யாகக் கொண்டு குளிர் சாதனங்களை தயாரிக்கும் டோசிபா (TOSHIBA) காரியா கார்பரேசன் யுனைடெட் டெக்னாலாஜிஸ் கார்பரேசனுடன் இணைந்து அவர்களது கூட்டு முயற்சியை "டோசிபா காரியர் ஏர் கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்" என்ற புதிய நிறுவனத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிடுதல், மேம்படுத்துதல், உற்பத்தி மற்றும் அவர்களது வணிக ரீதியிலான பதப்படுத்தல் பொருள்களில் விற்பனை போன்றவைகளில் இடத்துக்கேற்ப மாற்றங்கள் செய்வ தற்கும் இந்தியாவில் கால் பதித்து விரிவாக்கம் செய்யவும், நிலை யற்ற குளிர் பதனப் பொருள்களின் பாய்வு (VRF) குறித்த வலுவான தேவைகளுக்கு ஆதரவளித்து ஒரு தீர்வை வழங்கவே, இந்த புதிய கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஆயத்த ஆடைகள் விற்பனை விரிவாக்கம்

சென்னை, ஆக. 25- ஆயத்த ஆடைகள் விற்பனை சந்தையில் ஆடவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென 20 தனியார் பிராண்டுகளுடன் 100க்கும் மேற்பட்ட ஆடைகள் மற்றும் துணைப் பொருட்களுக்கான பிராண்டுகளை கொண்டுள்ள ட்ரெண்ட்ஸ் (ஜிக்ஷீமீஸீபீs) நிறுவனம், தமது விற்பனையை தமிழ்நாடு மற்றும் தென் மண்டலத்தில் விரிவாக்க அதறகான விளம்பர பிரச்சார ஒலி-ஒளி காட்சியை சென்னை வி.ஆர். வணிக வளாகத்தில் ஒளிபரப் பியது. இந்நிறுவன விற்பனையகங்கள் இன்றைக்கு இந்தியாவின் ஆடை களுக்கான மிகப்பெரிய அமைவிடமாக திகழ்கிறது. பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய நம் நாட்டின் பரவலான மக்களுக்கு சமீபத்திய நவீன நவ நாகரிக ஆடைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது என ட்ரெண்ட்ஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தின் தலைமை இயக்க செயல் அதிகாரி விப்பின்தியாகி தெரிவித்துள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner