எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேய் பயத்தால் காலியாக இருக்கிறதாம்

கல்லாவி காவலர் குடியிருப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த  கல்லாவி காவலர் குடியிருப்பில் பேய் பயத்தால் காவலர் குடியிருப்புகளில் தங்குவதற்கு யாரும் வரமறுக்கின்றனர். வாடகைக்கு வீடு எடுத்து வெளியில் தங்கும் நிலை உள்ளது. இதனால் குடியிருப்புகள் அனைத்தும் காலியாக கிடக்கிறது. கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி-தாசம்பட்டி ரயில் நிலையம் அருகில் சுடுகாட்டு பகுதியில், கடந்த 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது.

அனைத்து வசதிகளுடன் கூடிய 20 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது. இதில், காவல் ஆய்வாளருக்கு தனி வீடும், எஸ்அய், ஏட்டு, காவலர்களுக்கு தனித்தனி வீடுகளும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த குடியிருப்பில் காவலர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்துக்கொண்டார். அதுமட்டு மின்றி, அருகிலேயே சுடுகாடு இருப்பதால் காவல்துறையினர் யாரும் இந்த காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்குவதற்கு தயங்குகின்றனர். அந்தக் காவலர் குடியிருப்பு அருகில், இரவு நேரங்களில் விநோத சத்தம் கேட்பதாகவும், காத்து, கருப்பு நடமாட்டம் உள்ளதாகவும், தங்கியுள்ள காவல்துறையினரின் குடும்பத் தினருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லா மல் போவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் சுடுகாடு அருகில் குடியிருப்பு உள்ளதால் தூங்கி எழுந்தவுடன் சுடுகாட்டில்தான் விழிக்க வேண்டிய அவலம் உள்ளது. இதனால்   அனைவரும் வீடுகளை காலிசெய்துவிட்டு வாடகை வீடுகளில் தங்கி, பணிக்கு சென்று வருகின்றனர். காத்து, கருப்பு, அமானுஷ்ய பயத்தால் புதிதாக யாரும் அங்கு தங்க வருவ தில்லை. ஒருசில காவலர்கள் தரைத்தளத்தில் உள்ள வீட்டில் பகல் நேரத்தில் மட்டும் வந்து ஓய்வு எடுத்து செல்வதாகவும், மாலை, இரவு நேரங்களில் தங்குவதில்லை என தெரிகிறது. குடியிருப்பு பயன்பாட்டில் இல்லாததால் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை.

இதனால் மின்வாரியம் மின் இணைப்பு களை துண்டித்துள்ளது. தற்போது அந்த குடியிருப்பு பாழடைந்து வீணாகும் சூழ்நிலை உள்ளது. கடந்த ஒரு ஆண் டுக்கு முன் புதுப்பிக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்ட போதும் யாரும் குடியேற வில்லை. ஆள் இல்லாத வீட்டிற்கு எதற் காக வெள்ளையடித்து பணத்தை வீணாக்க வேண்டும் என காவல்துறையினர் வேத னையடைகின்றனர். இப்பகுதியில் உள்ள மின்சார கம்பங்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. அந்த வழி யாக செல்லும் பொதுமக்கள் அச்சத்து டனே செல்கின் றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறு கையில், சுடுகாடு அருகில் இருப்பதால் குடும்பத்துடன் குடியேற தயக்கமாக உள்ளது. அது மட்டுமின்றி சரிவர மின் வினியோகம் கிடையாது. வீடுகளும் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. காத்து, கருப்பு, பேய் பய மெல்லாம் எங்களுக்கு இல்லை. மனைவி, குழந்தைகள் என இருந்தால் தேவையற்ற கவலை ஏற்படும். அதனால் தான் குடி யேறுவதற்கு தயக்கம் காட்டுகிறோம், என்றனர். யாருக்கும் பயன்படாமல் வீணாக உள்ள அந்த காவலர் குடியி ருப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, ஏழை மக்களுக்காவது ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

- தினகரன், 26.7.2018

தகவல்: கு.பஞ்சாட்சரம்

காவல்துறையினரே பேய் என்ற புளுகுக்குப் பயந்தால் நாடு என்னாவது?

குறிப்பு: தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வீடுகளை எல்லாம் ஈரோட்டில் ஏலம் எடுத்தவர் தந்தை பெரியார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner