எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.25  கேரளத்தில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற “பி கிரேடு அலுவலர்’ பணிக்கான தேர்வை எழுதத் தவறிய அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறுவாய்ப்பு வழங் குவதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஅய்)

அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வியாழக் கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கேரளத்தில் பல்வேறு மய்யங்களில் பி கிரேடு அலுவலர் பணிக்கான முதல் கட்டத் தேர்வு, வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வினை எழுதத் தவறியவர்களுக்காக, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு புதிதாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும். அந்த அனுமதிச் சீட்டுகளை, ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏற்கெனவே, கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்வினை எழுதியவர்கள், வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், செப்டம்பர் 6-7 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த பி கிரேடு அலுவர் பணிக்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள், செப்டம்பர் 15-16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner