எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்ம்பதுகளில் சபரிமலையில் நிகழ்ந்த தீவிபத்து, இப்போது பலருக்கும் தெரிந்திருக்க வில்லை. அப்போது தெரிந்தவர்கள், அதை மறந்திருக்கவே மாட்டார்கள்.

சபரிமலையில் தீ விபத்து. இது விபத்தே இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. கேரளத்தின் காவல்துறை ஆவணங்களில் விபத்து என்றுதான் பதிவு செய்யப்பட்டி ருக்கிறது. ஆக சபரிமலையில் தீ விபத்து என்ற செய்தி, காட்டுத்தீயெனப் பரவியது.

தந்த்ரி, மேல்சாந்தி, கீழ் சாந்தி, சபரி மலைக்கு நெருக்கமாக இருந்த முக்கிய மானவர்கள், கேரள அரசு என பலவித முயற்சிகளால் கோயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. கட்டடங்கள் புதுப்பிக்கப் பட்டன.

தீ விபத்தில் அய்யப்பன் சிலை சற்றே சேதமடைந்திருந்தது. பரசுராமனால் ஏற்படுத்தப்பட்ட  அய்யப்பன் சிலை அது. சேதமடைந்த சிலையைக் கொண்டு பூஜிக்கவோ தரிசிக்கவோ கூடாது என்கிறது ஆகம சாஸ்திரம்.

தீவிபத்துக்குப்பின்னர் பி.டி.ராஜன், நவாப் ராஜமாணிக்கம் புதிதாக ஏற்படுத்திய அய்யப்பன் சிலை

அந்த சமயத்தில், நவாப் ராஜமாணிக் கமும், பி.டி.ராஜனும் சேர்ந்து, அய்யப்பன் சிலை ஒன்றைச் செய்தார்கள்.

நவாப் ராஜமாணிக்கம்தான்  நடிகர் எம்.என். நம்பியாரை அய்யப்ப பக்தராக்கி யவர். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, மிகப் பெரிய நாடகக் கம்பெனி வைத்திருந்தார். அதில் சேர்ந்து நடித்து வந்தவர் நம்பியார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, தீவிரமான அய்யப்ப பக்தர். அவர், எங்கெல்லாம் நாடகம் போடுகிறாரோ அங்கெல்லாம் அய்யப்பனின் படத்தை வைத்து, பூஜை போட்ட பிறகே நாடகத்தைத் தொடங்குவார். இப்படி ஊர் ஊராகச் சென்று, நாடகம் போடுகிற வேளையில், மக்களுக்குள் அய் யப்ப பக்தியை அவர்தான் பரப்பியவர்..

மதுரை பி.டி.ராஜனும், நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளையும் சேர்ந்து அய்யப்பன் சிலையைச் செய்து வைத்திருந்தார்கள். அதேபோல், பாலக்காடு சாமி அண்ணா என்பவரும் சிலையை செய்திருந்தார். இவர்கள் மட்டுமின்றி, கேரளத்தைச் சேர்ந்த சுவாமி விமோசனானந்தாவும் அய்யப்பன் சிலையை செய்திருந்தார்.

அதையடுத்து, குடவோலை முறைப்படி, அய்யப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் நவாப் ராஜமாணிக் கம் பிள்ளையும் பி.டி.ராஜனும் என பெயர் கள் வந்தன. அவர்கள் வழங்கிய சிலைதான் இன்றைக்கும் சபரிமலையில் உள்ளது.

பாலக்காடு சாமி அண்ணா, அவர் செய்த சிலையை தன்னுடைய பாலக்காட்டின் வீட்டிலேயே வைத்து பூஜித்து வந்தார். அந்த சிலை இன்றைக்கும் அவரின் வழித்தோன் றல்களான அய்யப்ப உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமணியம் மற்றும் அவர்களின் குடும் பத்தாரால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

சுவாமி விமோசனானந்தா செய்த சிலையை, காசியில் உள்ள திலபாண்டீஸ் வரர் கோயிலில் கொண்டு சென்று வைத் தார். காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திலபாண் டீஸ்வரர் கோயிலில், பதினெட்டுப் படிகளு டன் அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது.

தீவிபத்தில் சேதமான அய்யப்பன் சிலை மணிமண்டப கோயில் மணியானது

சபரிமலையில், பதினெட்டுப் படிகள் ஏறியதும், அய்யப்பனின் சந்நிதி. இந்த சந்நிதிக்கு எதிரில், மணி மண்டபம். அதாவது, மணி இருக்கும் மண்டபம். இந்த கோயில்மணிதான் பரசுராமனால் ஏற்படுத் தப்பட்டு, தீ விபத்தில் சேதமடைந்த அய்யப் பன் சிலையாகும். சிலை சேதம் அடைந்த பிறகு, அந்த சிலையை அப்படியே மணி யாக்கி, சந்நிதிக்கு எதிரே கட்டிவைக்கப் பட்டது.

சபரிமலை விபத்துகள் உயிரிழப்புகள் 102 பேர் பலி

சபரி மலைக்கு சென்று 2011ஆம் ஆண்டில் ஜனவரி 14ஆம் தேதி அன்று திரும்பிய பக்தர்கள் ஜோதியை பார்த்த பின்பு தங்கள் வாகனங்களில் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இடுக்கி மாவட்டம் வண்டி பெரியார், புல்மேடு அருகில் உப்புப் பாறை வழியாக ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பகுதி வனப்பகுதி என்பதோடு பள்ளத்தாக்கு மிகுந்த பகுதி. நெரிசலை தவிர்க்க வாகனங்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதில் 102 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரிக்க முதல்வர் அச்சுதானந்தன் அப் போது விசாரணைக் குழுவை அமைத்தார்.

இதுகுறித்து ஆய்வு செய்த மாநில வருவாய் முதன்மை செயலர் நிவேதிதா சரண் வெளியிட்ட அறிக்கையில், ஜீப், ஆட்டோ சரிந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. ஜீப்பும், ஆட்டோவும் போட்டிபோட்டுக்கொண்டு பக்தர்களை ஏற்றும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஆட்டோ திடீரென ஜீப் மீது சாய்ந்தது. இதனால் இரு வாகனங்களுக் கிடையில் பக்தர்கள் சிக்கி உயிரிழந்தனர். சிலர் விபத்தில் சிக்காமல் இருக்க ஓடும் போது கூட்ட நெரிசலில் கீழே தள்ளப்பட்டு மற்றவர்கள் அவர்கள்மீதேறி மிதித்துக் கொண்டு ஓடியதில் உயிரிழந்துள்ளனர்.

அய்யப்பன் கோயில்

முதல் விபத்து

1952 ஜன. 14ஆம் தேதி அன்று வெடி வழிபாடு நடத்துவதற்காக அங்கு வெடி மருந்து வைக்கப்பட்டிருந்த 2 கூடாரங் களில் திடீரென தீ பிடித்ததில் 60 பேர் பலி.

2ஆவது விபத்து

1999 ஜன. 14 பம்பை ஹில்டா பகுதியில் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி 52 பேர் பலியாயினர்.

3ஆவது விபத்து

2011 ஜன. 14 அன்று நடைபெற்ற வாகன விபத்து, கூட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் உயிரிழந்தார்கள்.

இதுதான் அய்யப்பன் சக்தியா?

- ந.கதிர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner