எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேரளாவில், மார்க்சிஸ்ட் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் ராமாயண பாராயணம் செய்து, அதன் வீடியோ பதிவை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமாயண மாதம்

தமிழகத்தின் ஆடி மாதத்தை கேரளா வில், கார்க்கிடக மாதமாக கடைப்பிடிக் கின்றனர். இந்த மாதத்தில் ராமாயண பாராயணம் என்பது கேரளாவில் பிர சித்தி பெற்றது. இந்த மாதத்தையே, ராமா யண மாதமாக கேரள மக்கள் அழைத்து வருகின்றனர்.

கேரளாவில், பா.ஜனதா வளர்ச்சி பெறுவது காங்கிரஸ் மற்றும் ஆளும் இடதுசாரி கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற் படுத்தி உள்ளது. எனவே, இந்து ஓட்டு வங்கியை வளைப்பதற்காக, ராமாயண மாதம் மீது அவர்களின் கவனம் திரும்பி யுள்ளது.

சமஸ்கிருத சங்கம்

இடதுசாரி ஆதரவு அமைப்பான, சமஸ்கிருத சங்கம் சார்பில் ராமாயண கருத்தரங்கை பல இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சங்கத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பால கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதை கேரள மக்கள் நம்ப மறுக் கின்றனர். இதே போல், விசார் விபாக் என்ற காங்கிரசின் கலாச்சார அமைப்பு சார்பில் ராமாயண மாதம் கடைப்பிடிக் கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் காயங்குளம் சட்டசபை தொகுதி பெண் எம்.எல்.ஏ.வான பிரதீபா ஹரி, சமீபத்தில் கேரள மாநிலத்திற்கே உரிய பாரம்பரிய உடை அணிந்து, எரியும் விளக்கின் முன் தரையில் அமர்ந்து, பக்தி சிரத்தையுடன் ராமாயணம் பாராயணம் செய்யும் வீடியோ பதிவு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

- தினச்செய்தி, 25.7.2018

தகவல்: கு.பஞ்சாட்சரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner