எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காந்தியாரின் சேவாகிராமம் ஆசிரமத் தில் கோவிந்த் என்ற அரிஜனச் சிறுவன் காந்தியாருக்கு வேண்டிய பணிவிடை களைச் செய்து வந்தான். உணவு, படுக்கை, இருக்கை ஆகியவைகளை கவனித்துக் கொள்வது அவன் பொறுப்பு. தான் ஒரு அரி ஜனச் சிறுவனாக இருந்தும், காந்தியாருக்குப் பக்கத்தில் இருந்து பணிவிடை செய்யும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கிய மாகக் கருதினான்.

ஒருநாள் அவன் காந்திஜியிடம் வந்து, பக்கத்தில் உள்ள வார்தா வரைப் போய்வர அனுமதி கேட்டான்.

ஏன்? என்று கேட்டார் காந்தியார்.

''தலைமுடி அதிகமாக வளர்ந்து விட் டது. முடிவெட்டிக் கொண்டு வருகிறேன்" என்றான் கோவிந்த்.

"ஏன், சேவா  கிராமத்தில் முடி திருத்து பவர்கள் இல்லையா?

"இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஜாதி இந்துக்கள். அரிஜனன் எனக்கு முடிவெட்ட மாட்டார்கள்.

"அப்படியானால், வார்தாவில் உள்ள ஜாதி இந்துக்கள் மட்டும் உனக்கு எப்படி முடிவெட்டுவார்கள்? இல்லை பாபுஜி. ஜாதியைச் சொல்லி விட்டால் அவர்களும் முடிவெட்ட மாட்டார்கள் அப்படியானால் நீ ஜாதியை மறைத்துச் சொல்லி முடிவெட்டிக் கொள்வாயா? இல்லை என் ஜாதியை மறைத்து பொய் சொல்லமாட்டேன்!

பிறகு வார்தா போய் என்ன செய்வாய்? உன் முடியை யார் வெட்டுவார்கள்?

அங்கே ஒருசில அரிஜன நாவிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என் முடியைத் திருத்தி விடுவார்கள் என்றான் கோவிந்த்

அப்படியா! சரி, போய் வா! சேவா கிராமத்திலுள்ள இந்த நாவிதர்கள் உன் முடியைத் திருத்துவதில்லை என்றால் நானும் அவர்களிடம் இனிமேல் முடித்திருத் திக் கொள்ளப் போவதில்லை என்று காந்தியார் சொன்னார்.

அன்று முதல் காந்தியார் முடிவெட்டிக் கொள்வதற்கான இயந்திரத்தையும் கத்திரிக் கோலையும் சொந்தத்தில் வாங்கி வைத்துக் கொண்டார். ஆசிரமத்தில் இருந்தவர்களின் உதவியைக் கொண்டு, தாமே முடிதிருத்திக் கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner