எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.26 வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வட்டிச் சலுகை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வட்டிச் சுமையின் காரணமாக, விற்பனைப் பத்திரம் பெறாமல் இருந்த வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டி ஆண்டுக்கு அய்ந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது.  இச்சலுகையைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு நடை முறைப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் இச்சலுகை மூலமாக, பல்வேறு திட்டங்களில் ஒதுக்கீடு தாரர்கள் வட்டி தள்ளுபடி நீங்கலாக, ழுத் தொகையையும் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்று பயனடைந்து வருகின்றனர். 26-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த இச் சலுகை மேலும் ஆறு மாதங் களுக்கு நீட்டிக்கப்படுகிறது.  எனவே, வட்டி சுமையால் விற் பனைப் பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவ லகங்களை அணுகி விற்பனைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner