எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,  ஆக.26 பிரீமியம் ரயில்களில் வளர் விகித அடிப் படையில் வசூலிக்கப்படும் கட்டணத்தை திருத்தி அமைத்து புதிய அட்டவணை அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில சமயங்களில், விமானக் கட்டணத்தைக் காட்டிலும் ப்ரீ மியம் ரயில்களின் கட்டணம் அதிகமாக இருப்பதால், பயணி களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்குவதற்காகவே திருத்தி யமைக்கப்பட்ட கட்டண முறை வெளியிடப்படவுள்ளது. இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

சுமார் 30 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே முன் பதிவு செய்யப்படும் குறிப்பிட்ட சில வகை ப்ரீமியம் ரயில்களை தேர்வு செய்து, அதில் வளர் விகித கட்டண முறையை தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வரு கிறது.

மேலும், மற்றொரு யோச னையும் பரிசீலனையில் உள்ளது. அதாவது, ப்ரீமியம் ரக ரயில்களில் முதலில் கட்டணப் பதிவு செய் யப்படும் 50 சதவீத இருக்கை களுக்கு, சாதாரண ரயில்களின் 3-ஆம் தர குளிர்சாதன வகுப்பு பெட்டிக்கான கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அதிகமாக கட்டணம் நிர்ணயிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதன் பின்னர் பதிவு செய் யப்படும் இருக்கைகளுக்கு 10 சதவீத அடிப்படையில் கட்ட ணங்களை அதிகரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, பயணிகளின் தேவை குறைவாக உள்ள வழித்தடங்களில் சிறப்புக் கட் டண சலுகைகளை வழங்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது.

அனைத்து பரிசீலனைகள் குறித்த இறுதி முடிவு அடுத்த வாரத்துக்குள்ளாக அறிவிக் கப்படும் என்றார் அந்த அதிகாரி.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner