எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.26 பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற் கொண்டு இரண்டு ஆண்டுகள் ஆகப் போகும் நிலையிலும் கூட, ஸ்டேட் வங்கி நாடு முழு வதும் இன்னும் 18 ஆயிரத்து 135 ஏடிஎம்-களை சீரமைக் காமலே இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி, பழைய 500 மற்றும்1000 நோட்டுக்களை செல்லாது என்ற அறிவித்த பிரதமர் மோடி, இவற்றுக்கு மாற்றாகப் புதிய வடிவிலான 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிட்டார்.

பின்னர் 200, 50, 10 ஆகிய நோட்டுகளும் புதிய வடிவில் அச்சிடப்பட்டு புழக்கத் துக்கு விடப்பட்டன.ஆனால், இந்த புதிய வடிவிலான ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு ஏடிஎம் இயந்திரங் களை மாற்றப் படாததால், ஏடிஎம் செயல்பாடே குறிப்பிட்ட காலத்திற்கு முடங்கிப் போனது.

தற்போதும்கூட ஏராளமான இடங்களில் ஏடிஎம்-கள் செயல்படவில்லை.இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறைவங்கியான, ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்), பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு, தனது 18 ஆயிரத்து 135 ஏடிஎம்-களை மறுசீரமைப்பே செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 59 ஆயிரத்து 521 ஏடிஎம் இயந்திரங்களில் 41 ஆயிரத்து 386 இயந்திரங்கள் மட்டுமே மறுசீரமைப்பு செய்யப் பட்டுள்ளது என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சந்திரசேகர் கவுத் என்பவர் எழுப்பியிருந்த கேள்விக்கு இந்த விடைகள் அளிக்கப் பட்டுள்ளன.

15 பேர் அமரக்கூடிய இருசக்கர வாகனம் தயாரித்து மாணவர்கள் சாதனை

சென்னை, ஆக.26 ஒரே நேரத்தில் 15 பேர் அமரக்கூடிய இருசக்கர வாகனத்தை தயாரித்து, இந்திய தொழில் தொடர்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பு யுனைடெட் காலனியில் இந்திய தொழில் தொடர்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் தற்போது 15 பேர் அமரக்கூடிய இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த 8 மாதங்களாக 70 மாணவர்கள் சேர்ந்து இதனை வடிவமைத்துள்ளனர்.

இந்த இருசக்கர வாகனம் ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான பாராட்டு விழா, வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், இந்திய தொழில் தொடர்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழக நிறுவனர் சுந்தரபாண்டியன் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எம்.பி., எம்எல்ஏக்களின்

செயல்பாடுகளை மதிப்பிட செயலி அறிமுகம்

புதுடில்லி, ஆக.26 வாக்காளர்கள் தங்கள் தொகுதி எம்.பி., எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கவும், மதிப்பீடு செய்யவும் செல்லிடப்பேசி செயலி (ஆப்) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த செயலியை அறிமுகப்படுத்தினார்.

“நேதா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த செயலியை தொழிலதிபர் பிராத்தம் மிட்டல் உருவாக்கியுள்ளார். செயலியை தொடங்கி வைத்த பிரணாப் பேசுகையில், “நல்ல தலைவர்கள், பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை, தெளிவு பெற்ற வாக்காளர்கள் இருந்தால் மட்டுமே ஜனநாயக சிறப்பாக இருக்கும்‘ என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனினும், மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கூறும் நிலை இல்லை.

இந்த நிலையில் இப்படி ஒரு செயலி அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி உறுப்பினருக்கு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான அபிப்ராயம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்‘ என்றார்.

செயலியை உருவாக்கிய மிட்டல் நிகழ்ச்சியில் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட அல்கோரிதம் ஆகியவை இந்த செயயில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆதார் எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி வாக்காளர்கள் இந்த செயலியை பயன்படுத்த முடியும். 16 மொழி களில் இந்த செயலியை பயன்படுத்த முடியும்‘ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner