எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.26  ‘சுதந்திரம் பெற்று,  71 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், தலித்துகள் மீதான வன்முறை குறையாதது பெரும் வேதனையாக உள்ளது’ என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரியானா மாநிலம், இசார் மாவட்டம், மிர்ச்பூர் கிராமத்தில், 2010 ஏப்ரலில், ஜாட் சமூகத்தின ருக்கும், தலித் சமூகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. குற்றவாளி இதில், தலித் சமூகத்தை சேர்ந்த தாரா சந்த் (60), என்பவரின் வீட் டுக்கு, ஜாட் சமூகத்தினர் தீ வைத்தனர்; படுகாயமடைந்த தாரா சந்த் மற்றும் அவரது மாற்று திறனாளி மகள், உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, இசார் மாவட்ட நீதி மன்றம்,  பேரை குற்றவாளிகள் என, அறிவித்தது. இதில் இருவ ருக்கு ஆயுள் தண்டனையும், அய்ந்து பேருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப் பட்டது; நன்னடத்தை காரண மாக, எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில்,  பேரும், மேல் முறையீடு செய்த னர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பி லும், காவல்துறையினர் சார்பி லும், தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள், முரளிதர், மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. விசாரணை முடிந்து, நீதிபதிகள் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்து,  ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும், தலித்துகள் மீதான வன்முறை, சிறிதும் குறைய வில்லை, இசார் மாவட்ட கிராமத்தில் நடந்த சம்பவம், இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இசார் மாவட்ட கிராமத்தில், தலித்துகளுக்கு எதிராக, திட்ட மிட்டு வன்முறை நடந்துள்ளது.

இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் விடுவித்த,  பேரில்,  பேருக்கு, வன்முறையில் பெரும் பங்கு உள்ளது, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்களை குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவிக்கிறது.

மேலும், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட,  பேரில், இரு வர் இறந்துவிட்டனர்; இருவ ருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, நீதிமன்றம் உறுதி செய்கிறது. மீதியுள்ள,  பேரில்,  பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஆயுள் தண்டனை யாக மாற்றப்படுகிறது.

குற்றவாளிகளிடமிருந்து வசூ லிக்கப்பட்ட அபராத தொகை யை, வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்கு செலவிட, அரி யானா அரசுக்கு உத்தரவிடப் படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner